AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோவை சிறுமி கொலையின் பரபரப்பு பின்னணி.. ஐஜி ரம்யா பாரதி விளக்கம்!

Coimbatore Girl Murder IG Ramya Bharathi Explain : கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதாக ஐஜி ரம்யா பாரதி தெரிவித்துள்ளார். மேலும், அதிர்ச்சியான தகவல்களை தெரிவித்துள்ளார்.

கோவை சிறுமி கொலையின் பரபரப்பு பின்னணி.. ஐஜி ரம்யா பாரதி விளக்கம்!
கோவை சிறுமி கொலையில் ஐஜி விளக்கம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 23 May 2026 16:23 PM IST

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம் கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி அந்த பகுதியை சேர்ந்த நபரால் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த கொலை தொடர்பாக கோவை மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி பரபரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பள்ளபாளையம் கிராமத்தை சேர்ந்த கட்டட தொழிலாளியின் 10 வயது மகள் கடந்த மே 21- ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது வீட்டின் அருகே வசித்த கார்த்திக் என்பவர் அந்த சிறுமியை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று கண்ணம்பாளையம் பகுதியில் வைத்து கொலை செய்தார். இது தொடர்பாக, சிலுவையின் பெற்றோர் காவல் துறையின் அவசர உதவி எண்ணான 100-க்கு தகவல் தெரிவித்தனர்.

5 தனிப்படைகள் – 250 கேமராக்கள் ஆய்வு

அதன் பேரில், சூலூர் போலீசார் சிறுமியை தேடி வந்தனர். இதில், கண்ணம்பாளையம் பகுதியில் சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கொலையாளிகளை பிடிப்பதற்காக 5 தனி படைகள் அமைக்கப்பட்டன. மேலும், அந்த பகுதிகளில் உள்ள சுமார் 250 சிசிடிவி கேமரா காட்சிகள் கைப்பற்றப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், சிறுமியை பைக்கில் அழைத்துச் சென்ற கார்த்திக்கின் அடையாளம் பதிவாகி இருந்தது.

மேலும் படிக்க: கோவை சிறுமி வழக்கு – கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் – முதல்வர் விஜய் உறுதி

கொலையாளிக்கு வலது கை- காலில் எலும்பு முறிவு

அதன் அடிப்படையில், நாகப்பட்டினத்தை சேர்ந்த கார்த்திகை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் தனது வீட்டின் மாடியில் பதுங்கி இருந்த போது, கைது செய்ய முடிந்தனர். அப்போது, அவர் மாடியில் இருந்து தவறி விழுந்ததில் வலது கை மற்றும் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும், இந்த சம்பவத்தை சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் கூலி தொழிலாளியான மோகன்ராஜ் என்பவரிடம் கார்த்திக் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், மோகன்ராஜும் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் கூராய்வு இன்று செய்யப்பட்டுள்ளது.

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலையானது உறுதி

அதற்கான அறிக்கை தற்போது வரை கிடைக்கப்பெறவில்லை. ஆனால், பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் கூறியதன் அடிப்படையில், அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், கொலை வழக்கை, போக்சோ வழக்காக மாற்றி விரைவில் அதற்கான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளோம். இந்த சம்பவத்தில் 24 மணி நேரத்தில் இரு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: மழை, காற்று, இடி… தொடரும் மின்டைக்கு காரணம் இதுதான் – மின்சாரத்துறை விளக்கம்

Follow Us