மழை, காற்று, இடி… தொடரும் மின்தடைக்கு காரணம் இதுதான் – மின்சாரத்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் தொடர் மின்தடை ஏற்பட்டு வரும் நிலையில் மக்கள் இது தொடர்பாக தங்கள் அதிருப்திகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் மின்சாரத்துறை சார்பாக மின் தடைக்கான காரணம் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை, மே 23 : சென்னை உள்ளிட்ட தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின் தடை இருந்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து மின் தடையை உடனே சரி செய்ய வேண்டும் என மக்கள் மின் அலுவலகங்களை முற்றுகையிட்டு வருகின்றனர். இதற்கிடையில் மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் அதிகாரிகளுடன் மின் தடை பிரச்னையை சரி செய்வது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் மின் தடைக்கான காரணம் குறித்து மின்சாரத்துறை விளக்கமளித்துள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
மின்டைக்கு காரணம் இதுதான் – மின்சாரத்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் தொடர் மின்தடை ஏற்பட்டு வரும் நிலையில் மக்கள் இது தொடர்பாக தங்கள் அதிருப்திகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் மின்சாரத்துறை சார்பாக மின் தடைக்கான காரணம் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன் படி தமிழ்நாட்டில் போதுமான அளவு மின்சாரம் கிடைக்கிறது. இருப்பினும் சில பகுதிகளில் உள்ளூர் அளவிலான மின்தடை ஏற்படுகிறது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவி பலி.. விளக்கம் கேட்ட சக மாணவிகளுக்கு மிரட்டல்.. களத்திற்கு வந்த அமைச்சர்!!




மேலும், உள்ளூர் மின் தேவை அதிகரிப்பால் பியூஸ் போவது, மழை, காற்று, இடி போன்ற வானிலை மாற்றங்கள், நிலத்தடி மின் கம்பி பழுதுகள், ஜம்பர் கட் மற்றும் மின் கம்பி துண்டிப்பு, துணை மின்நிலையங்களில் ஏற்படும் கோளாறுகள் மற்றும் டிரிப்பிங், வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற பகுதிகளில் அதிக நுகர்வோர் சுமையால் ஏற்படும் உபகரண அழுத்தம், மரக்கிளைகள் மின் கம்பிகளைத் தொடுதல் மற்றும் வெளிப்புற சேதங்கள் திட்டமிட்ட பராமரிப்பு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் போன்ற காரணங்களால் மின் தடை நிறுத்தம் ஏற்படுகிறது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து மின் விநியோக வட்டங்களிலும் பணியில் ஈடுபட்டுள்ள எம்ஆர்டி குழுக்கள், அதிக நுகர்வோர் சுமை, நகர வளர்ச்சி காரணமாக மீண்டும் மீண்டும் மின்தடை ஏற்படுகிறது. மேலும் உயர்திறன் மின்மாறிகள் அமைத்தல், புதிய துணை மின் நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : “12 நாள் ஆட்சியில் 30க்கும் மேற்பட்ட குற்றங்கள்”.. சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி.. கோவை சிறுமி கொலை வழக்கில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!!
இந்த நிலையில் மின்வெட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் தமிழக மின்வாரியத்தில் பணிபுரியும் அலுவலர்கள் இந்தியாவிலேயே மிகச்சிறந்தவர்கள் என்றும் எந்தவொரு மின் பிரச்னைகளையும் எப்படி சரிசெய்வது என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். முதல்வரும் அமச்சர்களும் அதிகாரிகளை அழைத்து முறையான ஆய்வுக்கூட்டம் நடத்தி பேசினாலே மின் விநியோகத்தை சீரமைக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.