கோவை சிறுமி வழக்கு – கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் – முதல்வர் விஜய் உறுதி
முதல்வர் ஜோசப் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கோயம்புத்தூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும்.
சென்னை, மே 23 : கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குற்றவாளிகளுக்கு குடுமையான தண்டனை வழங் வேண்டும் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் ஜோசப் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கோயம்புத்தூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும் என்று அதில் உறுதியுளித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், கோயம்புத்தூரில் மே 22, 2026 நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.




இதையும் படிக்க : அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவி பலி.. விளக்கம் கேட்ட சக மாணவிகளுக்கு மிரட்டல்.. களத்திற்கு வந்த அமைச்சர்!!
முதல்வர் விஜய்யின் எக்ஸ் பதிவு
கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.
தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும்…
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 23, 2026
மேலும் அவர் தனது அறிக்கையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : பதவி ஆசையா?.. தவெக அமைச்சரவையில் இடம்பெற்றது ஏன்?.. திருமாவளவன் பரபர விளக்கம்!!
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து இறுதி சடங்கு செய்வதற்காக சிறுமியின் உடல் சொந்த ஊரான சேலம் மாவட்டம் மேட்டூருக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த சம்வபத்தில் தொடர்புடைய மோகன் ராஜ் மற்றும் கார்த்தி ஆகிய இருவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் இருவரும் சிறுமிக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்றும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு சாக்லேட் தருவதாக கூறி அழைத்து சென்றதும் தெரியவந்தது.
மேலும் சிறுமி காணாமல் போன பிறகு அனவருடன் சேர்ந்து சிறுமியை நல்லவர்கள் போல தேடியதும் தெரியவந்திருக்கிறது. இந்த நிலையில் தான் சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது அவர்கள் இருவரும் சிறுமியை பைக்கில் கூட்டி சென்றது தெரிய வந்திருக்கிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.