AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி லேட்டா வந்தா அவ்ளோதான்… பள்ளிக் கல்வித்துறை ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

School Education Department: தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் காலை 10 மணிக்கு முன்னதாக பணிக்கு வரவேண்டும் எனவும், உதவியாளர்கள், கணக்காளர்கள் 9:30 மணிக்கு பணிக்கு வர வேண்டும் என்று அந்த துறை தரப்பில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இனி லேட்டா வந்தா அவ்ளோதான்… பள்ளிக் கல்வித்துறை ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!
பள்ளிக்கல்வித்துறை ஊழியர்களுக்கு நேரக்கட்டுப்பாடு
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 23 May 2026 19:01 PM IST

தமிழகத்தில் புதிதாக தமிழக வெற்றிக் கழக அரசு பதவி ஏற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழக தலைமைச் செயலாளர், முதல்வரின் தனி செயலாளர்கள், உளவுத்துறை டிஜிபி மற்றும் ஐஜி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அரசு துறைகளில் முக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகள் உள்ளிட்டோர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தற்போதும், அனைத்து துறைகளிலும் அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பள்ளி கல்வித் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் நேர கட்டுப்பாடுகளை பின்பற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் காலை 10 மணிக்குள் அலுவலகம் வர வேண்டும்.

காலை 9:30 மணிக்கு அலுவலகத்தில் இருத்தல் வேண்டும்

தங்களது பணி முடிந்து அலுவலகத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட 2- ஆம் நிலை அலுவலர்களிடம் உரிய அனுமதி பெற வேண்டும். அலுவலக உதவியாளர்கள் மற்றும் கணக்காளர் அனைவரும் காலை 9:30 மணிக்கு அலுவலகத்தில் இருத்தல் வேண்டும். விடுமுறை பெற வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முன்னரே அனுமதி பெற்று விடுமுறை எடுக்க வேண்டும். அதன்படி, ஊழியர்களின் விடுப்பு பதிவேடுகளை முறையாக பராமரித்தல் வேண்டும்.

மேலும் படிக்க: அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவி பலி.. விளக்கம் கேட்ட சக மாணவிகளுக்கு மிரட்டல்.. களத்திற்கு வந்த அமைச்சர்!!

சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை

இந்த அறிவுறுத்தல்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறை ஊழியர்கள் பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றவில்லை எனில் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிய அமைச்சரவை பதவி ஏற்றவுடன், அந்த அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதன்படி, பள்ளி கல்வித்துறையானது அமைச்சர் ராஜமோகன் வசம் ஒப்படைக்கப்பட்டது.

பள்ளிகள் திறப்புக்கான முன்னேற்பாடுகள் ஆய்வு

அதன்படி, தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பது. மாணவ, மாணவிகளுக்கான புதிய புத்தகங்களை வழங்குவது. அந்த புத்தகங்களை முன்கூட்டியே அரசு பள்ளிகளுக்கு அனுப்பி வைப்பது. பள்ளிகள் திறப்பதற்காக வகுப்பறைகள் உள்ளிட்டவை தூய்மைப்படுத்தும் பணி. சமையல் அறை, கழிவறை உள்ளிட்டவற்றை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

தொடர் ஆய்வில் ஈடுபட்டு வரும் அமைச்சர் ராஜ்மோகன்

தொடர்ந்து, தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 1- ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களுக்கான சீருடைகள் மற்றும் புத்தகங்கள் வினியோகம் உள்ளிட்டவை தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இவ்வாறாக தமிழக பள்ளிக் கல்வித் துறையில் அமைச்சர் உள்ளிட்டோர் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: மழை, காற்று, இடி… தொடரும் மின்தடைக்கு காரணம் இதுதான் – மின்சாரத்துறை விளக்கம்

Follow Us