AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

5 வருஷம் ஓடுறதே கஷ்டம்.. தவெகவை வறுத்தெடுத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்!

DMK Leader MK Stalin Criticized Tvk Govt: தமிழக வெற்றிக் கழக அரசு 5 ஆண்டை நிறைவு செய்யாது என்றும் இந்த அரசுக்கு விழுந்த சினிமா கவர்ச்சி வாக்குகள் நீடிக்காது என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

5 வருஷம் ஓடுறதே கஷ்டம்.. தவெகவை வறுத்தெடுத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்!
தவெக அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்வது கஷ்டம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 24 May 2026 06:21 AM IST

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்ற கழக இளைஞரணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த காங்கிரஸ் சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைத்ததற்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிகழ்வில், பங்கேற்றிருந்த திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு. க. ஸ்டாலின் பேசியதாவது: கடந்த சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஏற்பட்ட வீழ்ச்சி தற்காலிகமானதாகும். ஒரு நடிகரை பார்த்து சென்ற மக்கள் மீண்டும் நம்மை தேடி வருவார்கள். திராவிட முன்னேற்ற கழகம் வீழ்ந்தாலும் எவ்வளவு விரைவாக எழுந்திருக்கும் என்பதை நாம் அனைவரும் காண்பிக்க வேண்டும். சமூக வலைதளங்களை நாம் சரியாக பயன்படுத்தி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகள் மற்றும் கருத்துக்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

தவெக அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்யாது

மொத்தத்தில் காலத்துக்கு ஏற்றார் போல நம்மை நாமே மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழக வெற்றிக் கழக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது. மாறிவரும் சூழலுக்கு ஏற்ப இளைஞர் அணியினர் சமூக வலைதளங்களில் வேலை செய்ய வேண்டும். அவர்களை சொந்தமாக கன்டென்ட் தயார் செய்யும் வகையில் இளைஞர் அணிக்கு ஒர்க் ஷாப் நடத்த உதயநிதிக்கு அறிவுறுத்துகிறேன். தமிழக வெற்றி கழகத்துக்கு விழுந்த வாக்குகள் அனைத்தும் சினிமா கவர்ச்சிக்காகவே விழுந்துள்ளது. இதை விடுத்து அரசியல் எழுச்சிக்கானது அல்ல.

மேலும் படிக்க: தவெக அரசு ரீல்ஸ்- இல் காட்டும் ஆர்வத்தை பெண்கள் பாதுகாப்பில் காட்டவில்லை.. முதல்வர் விஜய் மீது நயினார் பாய்ச்சல்!

விஜய்யின் சினிமா கவர்ச்சி வெகு நாள்கள் நீடிக்காது

இந்த சினிமா கவர்ச்சி வெகு நாட்களுக்கு நீடிக்காது. 2 ஆண்டுகள் கூட இந்த அரசு செயல்படாது. குழந்தைகள் பெற்ற தாயே தேடுவது போல தமிழக மக்கள் கொஞ்ச நாளில் நம்மை தேடி வருவார்கள். இருப்பினும், திராவிட முன்னேற்ற கழகத்தினர் சோர்ந்து போகாமல் தங்களுடைய வேலைகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். சுமார் 17 ஆண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் அங்கம் வகித்து பல்வேறு தேர்தல்களை காங்கிரஸ் கட்சி சந்தித்து இருந்தது. ஆனால், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

17 ஆண்டு கால கூட்டணியை முறித்த காங்கிரஸ்

ஆனால், சில காரணங்களால் தவெகவுடன், காங்கிரஸ் கூட்டணி அமைக்க முடியாமல் போனது. தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் திமுக கூட்டணியில் இருந்து திடீரென விலகிய காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைத்து அமைச்சரவையில் இடம்பெற்றது. இந்த செயலை கண்டித்து திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: கோவை சிறுமி கொலை சம்பவம்: டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரபரப்பு கடிதம்!

Follow Us