AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நாங்க இல்லனா திமுக வெற்றி பெற்றிருக்க முடியாது… ஆ.ராசாவின் கருத்தால் கொந்தளித்த காதர் மொய்தீன்!

IUML Leader Khader Mohideen: தமிழக சட்டமன்ற தேர்தலில் இஸ்லாமியர்கள் வாக்குகள் இன்றி திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றிருக்க முடியாது என்றும் திமுக வெற்றி பெற்ற தொகுதிகளை கணக்கெடுத்து பார்க்க வேண்டும் என்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார்.

நாங்க இல்லனா திமுக வெற்றி பெற்றிருக்க முடியாது… ஆ.ராசாவின் கருத்தால் கொந்தளித்த காதர் மொய்தீன்!
இஸ்லாமியர்கள் வாக்குகள் இன்றி திமுக வெற்றி பெற்றிருக்காது
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 23 May 2026 21:05 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்ற காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்து அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா அநாகரிகமான விமர்சனங்களை முன் வைத்திருந்தார். இது தொடர்பாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் கூறியதாவது: இஸ்லாமியர்கள் வாக்குகள் இல்லாமல் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருக்க முடியாது. திமுக வெற்றி பெற்ற இடங்களில் கணக்கு பார்க்க வேண்டும். இஸ்லாமியர்கள் வாக்குகள் இல்லாமல் யாரும் வெற்றி பெற்றது கிடையாது. எங்களை யாராவது விமர்சனம் செய்தால் அது முட்டாள்தனமான விஷயமாகும்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கை விமர்சிக்க கூடாது

எங்களை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. அதையும் மீறி எங்களை யாரும் விமர்சனம் செய்தால் நாங்கள் வைக்கும் விமர்சனம் வேறு மாதிரியாக இருக்கும். எனவே, எங்கள் மீது விமர்சனம் வைக்கக் கூடாது. அமைச்சர் அவையில் நாங்கள் இடம் பெற்றிருக்கலாம். அப்படி இடம்பெற்றதால் கூட்டணியே முறித்தோம் என்று நாங்கள் கூறவில்லை. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்வதாகும். தேர்தல் காலத்தில் மட்டுமே அதை முடிவு செய்ய வேண்டும். தற்போது வரை தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மரபு கிடையாது.

மேலும் படிக்க: சாதி பார்த்து அறநிலையத்துறை பதவியா?.. அமைச்சர் ரமேஷ் கொடுத்த விளக்கம்!!

தமிழகத்தில் இனி வரும் காலங்களில் கூட்டணி ஆட்சி முறை தொடரும்

ஆனால், முதல் முறையாக தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி ஆட்சியை தொடங்கி உள்ளது. இது இத்துடன் நிற்காது. இனி வரும் காலங்களிலும் கூட்டணி ஆட்சி முறை தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால் தற்போது வந்துள்ள கூட்டணி ஆட்சி முறை தொடர்ந்து நீடிக்க தான் செய்யும். இதனை அனைவரும் சிந்திப்பார்கள். கால போக்கில் இந்த முறை தான் தொடரும். அப்படி ஒரு புதிய சகாப்தத்தை தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முதல் அமைச்சருமான ஜோசப் விஜய் உருவாக்கியுள்ளார் என்று நம்புகிறேன்.

திமுக – அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்தன

திமுக மற்றும் அதிமுக ஆகியவை இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சிகளுக்குள் பேசப்பட்டது. இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியிலும் திமுக சார்பாக பேசப்பட்டது என்று தெரிவித்தார். தவெகவுடன் கூட்டணி விவகாரம் தொடர்பாக ஆ.ராசா கடுமையான விமர்சனங்களை முன் வைத்ததன் காரணமாக இந்த விவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: பதவி ஆசையா?.. தவெக அமைச்சரவையில் இடம்பெற்றது ஏன்?.. திருமாவளவன் பரபர விளக்கம்!!

Follow Us