AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஸ்மார்ட்போனில் விரைவில் ஸ்டோரேஜ் Full ஆக என்ன காரணம்?.. இவை தான்!

Why Smartphone Storage Filled So Quickly | தற்போதைய காலக்கட்டத்தில் அனைவராலும் பயன்படுத்தப்படும் முக்கிய செயலியாக ஸ்மார்ட்போன்கள் உள்ளன. இந்த நிலையில், ஸ்மார்ட்போன்களில் ஏன் விரைவில் ஸ்டோரேஜ் தீர்ந்துவிடுகிறது, அதற்கான காரணங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஸ்மார்ட்போனில் விரைவில் ஸ்டோரேஜ் Full ஆக என்ன காரணம்?.. இவை தான்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 22 May 2026 15:52 PM IST

தற்போதைய காலத்தில் ஸ்மார்ட்போன் (Smartphone) என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் தங்களது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்தும் அம்சமாக ஸ்மார்ட்போன் உள்ளது. இத்தகைய முக்கிய அம்சமாக ஸ்மார்ட்போன் உள்ள நிலையில், அவசர தேவைகளின் போது ஹேங் ஆகும் பட்சத்தில் மிகவும் சிரமமாக மாறிவிடும். ஸ்மார்ட்போன்கள் ஹேங் ஆவதற்கு மிக முக்கிய காரணியாக உள்ளது ஸ்டோரேஜ் தான். இந்த நிலையில், ஸ்மார்ட்போன் ஏன் மிக விரைவாக ஸ்டோரேஜ் நிரம்பி விடுகிறது என்பதை தெரிந்துக்கொள்ளும் பட்சத்தில் உங்களால் அதனால் ஏற்படும் சிக்கலை தவிர்க்க முடியும்.

ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ் விரைவில் நிரம்பிவிடுவது ஏன்?

பெரும்பாலான நபர்கள் ஸ்டோரேஜ் விரைவில் நிரம்பிவிடக்கூடாது என்பதற்காக அதிக ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன்களை வாங்குகின்றனர். ஆனால், ஒருசில மாதங்களிலேயே அந்த ஸ்மார்ட்போன்களிலும் ஸ்டோரேக் நிரம்பிவிடுகிறது. இவ்வாறு நாளுக்கு நாள் ஸ்டோரேஜ் நிரமபும் நிலையில், ஒரு கட்டத்திற்கு பிறகு அவர்களால் ஸ்மார்ட்போனை பயன்படுத்தவே முடியாத நிலை ஏற்படுகிறது. இது தான் பெரும்பாலானவர்கள் எதிர்க்கொள்ளும் சிக்கலாக உள்ளது. இதற்கு பின்னால் சில முக்கிய காரணிகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : எரிபொருள் விலை உயர்வு – ரூ.10 லட்சத்திற்குள் சிறந்த எலக்ட்ரிக் கார்கள் – உங்கள் சாய்ஸ் எது?

ஸ்மார்ட்போனில் ஸ்டோரேஜ் நிரம்ப இவை தான் காரணம்?

ஸ்மார்ட்போனில் ஸ்டோரேஜ் நிரம்ப சில முக்கிய காரணிகள் உள்ளன. அவை என்ன என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதிக இடத்தை பிடித்துக்கொள்ளும் செயலிகள்

தற்போதைய சூழலில் சமூக ஊடகங்கள், பணம் அனுப்பும் செயலிகள், பயண செயலிகள் என ஒவ்வொருவரும் பல வகையான செயலிகளை பயன்படுத்துகின்றனர். இந்த ஒவ்வொரு செயலியும் ஸ்மார்ட்போனில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துக்கொள்ளும். இதன் காரணமாக ஸ்மார்ட்போனில் விரைவில் ஸ்டோரேஜ் நிரம்பிவிடும் சூழல் உருவாகும்.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்

தற்போதைய காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள் எல்லாம் அதிக தரம் கொண்ட கேமராக்களுடன் உள்ளன. இதன் காரணமாக அவற்றில் எடுக்கப்படும் புகைப்படங்களும் அதிக தரம் வாய்ந்தவையாக உள்ளன. அவற்றுக்கு கூடுதல் இடம் தேவைப்படும் காரணத்தால் ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ் மிக விரைவாக தீர்ந்துவிடும் சூழல் உள்ளது.

இதையும் படிங்க : அதிகரிக்கும் மால்வேர் தாக்குதல்கள் – ஆண்ட்ராய்டு போன்களுக்கு ஆண்டி வைரஸ் அவசியமா?

கேட்ச் ஃபைல்கள்

ஸ்மார்ட்போன்களில் செயலிகள் எவ்வளவு இடத்தை பிடிக்கின்றனவோ அதே அளவுக்கு அந்த செயலிகளை பயன்படுத்தும்போது கேட்ச் ஃபைல்களும் இடத்தை பிடிக்கும். இது ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜை மிக விரைவில் தீர்த்துவிடும். இதன் மூலம் ஸ்மார்ட்போன் விரைவில் ஹேங் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

Follow Us