AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிகரிக்கும் மால்வேர் தாக்குதல்கள் – ஆண்ட்ராய்டு போன்களுக்கு ஆண்டி வைரஸ் அவசியமா?

Android Security Alert : கம்ப்யூட்டர்களில் பரவும் வைரஸ்களைப் போல ஆண்ட்ராய்டு போன்களில் வைரஸ் பாதிப்பு ஏற்படலாம் எனவும் ஆனால் அது மிக அரிதாகவே நடைபெறும் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் ஆண்ட்ராய்டு போன்களுக்கு ஆண்டி வைரஸ் அவசியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிகரிக்கும் மால்வேர் தாக்குதல்கள் – ஆண்ட்ராய்டு போன்களுக்கு ஆண்டி வைரஸ் அவசியமா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 20 May 2026 18:01 PM IST

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் தற்போது உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அதே நேரத்தில், மால்வேர், ஸ்பைவேர்கள் மற்றும் போலி செயலிகள் மூலம் நடைபெறும் இணையத் தாக்குதல்களுக்கும் ஆண்ட்ராய்டு போன்கள் அதிகமாக இலக்காகி வருகின்றன. இந்த நிலையில், ஆண்ட்ராய்டு போன்களுக்கு ஆண்டி வைரஸ் ஆப் அவசியமா? என்ற கேள்வியும் பலரிடமும் எழுந்துள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பாரக்கலாம்.

ஆண்ட்ராய்டு போன்களுக்கு வைரஸ் தாக்குதல்?

கம்ப்யூட்டர்களில் பரவும் வைரஸ்களைப் போல ஆண்ட்ராய்டு போன்களில் வைரஸ் பாதிப்பு ஏற்படலாம் எனவும் ஆனால் அது மிக அரிதாகவே நடைபெறும் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால் மால்வேர், ஸ்பைவேர், ஃபிஷிங் தாக்குதல்கள், டேட்டா திருச்சு போன்ற பிரச்னைகள் ஆண்ட்ராய்டு போன்களில் அதிகம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதையும் படிக்க : பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் – தடுக்க உதவும் யூடியூபின் ஏஐ தொழில்நுட்பம்

ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் பிளே ஸ்டோர்க்கு வெளியே உள்ள மூன்றாம் தர செயலிகளை எளிதாக இன்ஸ்டால் செய்ய முடியும். இதனால் போலி செயலிகள், பிரபல செயலிகளை போலவே போலி செயலிகள் மூலம் மால்வேர் ஆண்ட்ராய்டு போன்களில் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. ஆப்பிள் ஐபோன்களைக் காட்டிலும் ஆண்ட்ராய்டு போன்கள் அதிக ஓபன் ஸ்பேஸில் செயல்படுவதால் பாதுகாப்பு சவால்களும் அதிகம் என கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் பிளே புரொடக்ட் என்ற பாதுகாப்பு வசதி ஏற்கனவே உள்ளது. இந்த வசதி செயலிகளை ஸ்கேன் செய்து சந்தேகத்துரியதாக இருந்தால் அது நம்மை எச்சரிக்கும். மால்வேர் இருந்தால் அது கண்டறியும். எனவே இது போதுமான பாதுகாப்பாக கருதப்படுகிறது.

ஆண்ட்ராய்டு போன்களுக்கு ஆண்டி வைரஸ் அவசியமா?

இந்த சூழ்நிலையில் ஆண்டிவரைஸ் தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக பொது இடங்களில் வைஃபை அதிகம் பயன்படுத்துபவர்கள், தெரியாத இணையதளங்களுக்கு அடிக்கடி செல்பவர்கள், கூகுள் பிளே ஸ்டோரில் இல்லாத மூன்றாம் தர செயலிகளை பயன்படுத்தினால் ஏபிகே ஃபைல்களை பதிவிறக்கம் செய்யும்போது போன்ற சூழ்நிலைகளில் ஆண்டி வைரஸ் தேவைப்படும்.

ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பாக பயன்படுத்த நிபுணர்கள் அறிவுறுத்தல்களை வழங்குகின்றனர். அதன் படி கூகுள் பிளே ஸ்டோர் மூலம் மட்டுமே செயலிகலை டவுன்லோடு செய்ய வேண்டும். ஆண்ட்ராய்டு போன்களில் சாஃப்ட்வேர்களை அடிக்கடி அப்டேட் செய்ய வேண்டும். இதனால் புதிய பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தால் அவை உடனுக்குடன் சரி செய்யப்படும்.

இதையும் படிக்க  : mAadhaar செயலி நிறுத்தம்? புதிய ஆதார் செயலியை மட்டும் பயன்படுத்த அறிவுறுத்தல்

ஆண்ட்ராய்டு போன்கலில் இருந்து கூகுள் குரோம் போன்ற பாதுகாப்பான புரௌசர்களை பயன்படுத்த வேண்டும். சந்தேகத்துக்குரிய லிங்க்ஸ்கள் மற்றும் வெப்ஸைட்களை ஓபன் சய்யாமல் இருப்பது நல்லது. பேருந்து நிலையங்கள், ரயில நிலையங்கள் பொது இடங்களில் சார்ஜங் போர்ட்ஸ்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. காரணம் அவற்றின் மூலம் டேட்டா திருடப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow Us