ஸ்மார்ட்போனை பெற்றோர்கள் ஈஸியா பயன்படுத்த 5 வழிகள்
Smartphone Tips For Parents : நம் பெற்றோருக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது சற்று சிக்கலாகவும் தோன்றும். குறிப்பாக போன் கால் தவிர பிற வசதிகள் அவர்களு்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால் சில ஸ்மார்ட்போனில் உள்ள சில எளிய ஆப்சன்கள் அதன் பயன்பாட்டை எளிதாக மாற்றுகின்றன.
இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன்கள் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறிவிட்டன. ஆனால், மொபைல்களில் இருக்கும் பல பயனுள்ள வசதிகள் குறித்து பெற்றோர்களுக்கு முழுமையாக தெரியாமல் இருக்கலாம். நம் முந்தைய தலைமுறையினரில் சிலருக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது சற்று சிக்கலாகவும் தோன்றும். குறிப்பாக போன் கால் தவிர பிற வசதிகள் அவர்களு்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால் சில ஸ்மார்ட்போனில் உள்ள சில எளிய ஆப்சன்கள் அதன் பயன்பாட்டை எளிதாக மாற்றுகின்றன. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
வாய்ஸ் அசிஸ்டென்ட் ஆப்சன்
ஸ்மார்ட்போனில் இருக்கும் வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதி நம் பெற்றோர்களுக்கும் வயதனாவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வசதியின் மூலம் டைப் செய்யும் சிக்கல் இல்லாமல் நம் கேள்விகள் கேட்கலாம், பாடல்களை கண்டுபிடிக்கலாம். மொழிபெயர்ப்பு செய்யலாம்., நமக்கு தேவையானவற்ற இணையத்தில் தேடலாம்.
இதையும் படிக்க : ஸ்னாப்சாட்டை காப்பி அடித்த இன்ஸ்டாகிராம்?.. புதிய இன்ஸ்டன்ட்ஸ் அம்சம் எப்படி உள்ளது?
Do Not Disturb Mode
அதிகமான ஸ்பாம் போன் கால்கள் மற்றும் நோட்டிஃபிகேஷன்கள் காரணமாக பலரின் தூக்கம் மற்றும் அமைதி பாதிக்கப்படுகிறது. குறிப்பாக மதிய தூக்கம் போன்ற முக்கிய தருணங்களில் அடிக்கடி வரும் நோட்டிஃபிகேஷன்கள் அவர்களுக்கு தொந்தரவு தரலாம். இதற்கு Do Not Disturb Mode மிகவும் உதவியாக இருக்கும். இந்த வசதியை இயக்கினால் தேவையற்ற போன் கால்கள் மற்றும் நோட்டிஃபிகேஷன்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும். தூங்கும் போதோ அல்லது முக்கியமான தருணங்களிலோ இந்த ஆப்சனை தேர்ந்தெடுக்கும் போது எந்த தொல்லையும் இல்லாமல் நம்மால் இருக்க முடியும்.
கூகுள் லென்ஸ்
கூகுள் லென்ஸ் வசதி பெற்றோர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய ஒரு அம்சமாகும். இதன் மூலம், தெரியாத பொருட்களை கண்டுபிடிக்கலாம்
மருந்து பெயர்களை படிக்கலாம். வெளிநாட்டு மொழிகளை மொழிபெயர்க்கலாம். உணவுப் பொருட்களை அடையாளம் காணலாம். கூகுள் லென்ஸ் மூலம் கேமராவை ஒரு பொருளின் மேல் காட்டினாலே அந்த பொருள் குறித்த தகவல்களை கூகுள் லென்ஸ் காட்டும்.
இதையும் படிக்க : JPEG புகைப்படங்கள் மூலம் அரங்கேறும் புதிய வகை மோசடி.. எச்சரிக்கும் சைபர் பாதுகாப்பு அமைப்புகள்!
ஸ்பிலிட் ஸ்கிரீன் ஆப்சன்
ஒரே நேரத்தில் இரண்டு செயலிகளை பயன்படுத்த உதவும் வசதிதான் ஸ்பிலிட் ஸ்கிரீன் வசதி. உதாரணமாக நாம் யூடியூப் வீடியோ பார்த்துக்கொண்டே வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்ப முடியும். அதாவது ஒரு செயலியை மூடிவிட்டு வேறு செயலிக்கு செல்ல தேவையில்லை.
ஸ்கிரீன் டைம்
பல பெற்றோர்கள் மொபைல் பயன்படுத்திய பிறகு ஸ்கிரீன் ஆஃப் செய்ய மறந்துவிடுவார்கள். இதனால் பேட்டரி வேகமாக காலியாகும். இந்த நிலையில் ஸ்கிரீன் டைம்அவுட் வசதி மூலம், சில நிமிடங்கள் போன் பயன்படுத்தப்படவில்லை என்றால் ஸ்கிரீன் தானாக Off ஆகிவிடும்.



