JPEG புகைப்படங்கள் மூலம் அரங்கேறும் புதிய வகை மோசடி.. எச்சரிக்கும் சைபர் பாதுகாப்பு அமைப்புகள்!
New Online Scam Targeting Public With JPEG Images | தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைவதை போலவே அதனை பயன்படுத்தி மோசடி மற்றும் குற்ற சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், ஜேபெக் புகைப்படங்களை பயன்படுத்தி புதிய வகை மோசடி அரங்கேறுவதாக சைபர் பாதுகாப்பு அமைச்சகங்கள் எச்சரிக்கின்றன.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு (Technology Development) ஏற்ப ஆன்லைன் மோசடி (Online Scam) மற்றும் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி அதன் மூலம் பணம் மோசடி செய்வது தொடர்கதையாக உள்ளது. அந்த வகையில், ஜேபெக் புகைப்படங்கள் (JPEG Photos) மூலம் புதிய மோசடி நடைபெறுவதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நிலையில், ஜெபெக் புகைப்படங்கள் மூலம் எவ்வாறு மோசடி நடைபெறுகிறது, அதில் உள்ள சிக்கல்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய சிக்கலாக உள்ள ஆன்லைன் மோசடி
உலகம் மிக வேகமாக தொழில்நுட்பத்தில் முன்னேறி வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களிடையே ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு என அனைத்திற்கும் செயலிகளும் உள்ளன. இவ்வாறு பொதுமக்கள் டிஜிட்டல் செயலிகள் மற்றும் இணையதளங்களை அதிகம் பயன்படுத்தும் நிலையில் அவற்றின் மூலம் மோசடிகள் அரங்கேறுவது தொடர்கதையாகி வருகிறது.
இதையும் படிங்க : கொட்டி கிடக்கு கேஷ்பேக்.. அன்னையர் தின சேலை அறிவித்த ஆப்பிள்.. மிஸ் பண்ணிடாதீங்க!




முன்னதாக மால்வேர் மற்றும் ஸ்பைவேர் தாக்குதல்கள் மொபைல் போனை ஹேக் செய்வது, செயலிகளை ஹேக் செய்வது, லிங்குகள் மூலம் மோசடி வலையில் சிக்க வைப்பது போல இருக்கும். ஆனால், தற்போது ஒரே ஒரு ஜெபெக் புகைப்படத்தின் மூலம் மிக சுலபமாக மோசடிகள் நடைபெறுவதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
ஜேபெக் புகைப்படம் மூலம் அரங்கேறும் ஆன்லைன் மோசடி
இந்தியாவில் ஜேபெக் புகைப்படங்கள் மூலம் பொதுமக்களிடம் மோசடிகள் மேற்கொள்ளப்படுவது தொடர்கதையாகி வருகிறது. ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களில் ஜேபெக் புகைப்படங்களை அனுப்பி அதன் மூலம் மோசடிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான், அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளில் வரும் திருமணம் அழைப்பிதழ்கள், ஜேபெக் புகைப்படங்கள், ஏபிகே ஃபைல்கள் ஆகியவற்றை தொட வேண்டா என்று சைபர் பாதுகாப்பு அமைச்சகங்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.
இதையும் படிங்க : வாட்ஸ்அப்பில் இனி குறுஞ்செய்திகள் மிஸ் ஆகாது.. அதான் கஸ்டம் லிஸ்ட் இருக்கே!
அவ்வாறு சந்தேகத்திற்கு உரிய புகைப்படங்கள், லிங்குகள், ஏபிகே ஃபைல்கள் ஆகியவற்றை தொடுவதன் மூலம் வங்கி கணக்கு விவரங்கள், பாஸ்வேர்டுகள், தனிப்பட்ட தகவல்கள் உள்ளிட்டவை திருடப்படுவதற்கான ஆபத்துகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.