AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாட்ஸ்அப்பில் இனி குறுஞ்செய்திகள் மிஸ் ஆகாது.. அதான் கஸ்டம் லிஸ்ட் இருக்கே!

WhatsApp Custom List Feature | உலக அளவில் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் தினசரி வாழ்வின் முக்கிய செயலியாக மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் உள்ளது. இந்த நிலையில், வாட்ஸ்அப்பில் முக்கிய குறுஞ்செய்திகள் மிஸ் ஆகாமல் இருக்க இந்த அம்சத்தை பயன்படுத்துங்கள்.

வாட்ஸ்அப்பில் இனி குறுஞ்செய்திகள் மிஸ் ஆகாது.. அதான் கஸ்டம் லிஸ்ட் இருக்கே!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 May 2026 00:51 AM IST

தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல அம்சங்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் முக்கிய செயலியாக மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளது. இதன் காரணமாக பலரும் இந்த செயலியை தங்களது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்துகின்றனர். பலருக்கும் நண்பர்கள் உடன் உரையாடுவது, அலுவலக தகவல்களை பெறுவது, தகவல்களை பரிமாறிக்கொள்வது என அனைத்திற்கும் முதன்மையாக உள்ளது. இத்தகைய முக்கியமான செயலியாக வாட்ஸ்அப் உள்ள நிலையில், அதில் முக்கிய குறுஞ்செய்திகளை தவறவிடாமல் இருக்க உதவும் கஸ்டம் லிஸ்ட் (Custom List) அம்சத்தை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இனி குறுஞ்செய்திகள் மிஸ் ஆகாது – கஸ்டம் லிஸ்ட் இருக்கே

வாட்ஸ்அப்பில் உள்ள இந்த கஸ்டம் லிஸ்ட் என்ற அம்சத்தை பயன்படுத்தி உங்கள் உரையாடல்களை குடும்பம், வேலை, நண்பர்கள், விற்பனையாளர்கள் போன்ற பல்வேறு பிரிவுகளாக பிரித்து வைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் பிரிவுகளில் சேர்க்கும் உரையாடல்கள் முதன்மையானவையாக இருக்கும். எனவே நீங்கள் உங்களது சாட்களை நீண்ட நேரம் ஸ்குரோல் செய்து தேட வேண்டிய அவசியம் இல்லை.

இதையும் படிங்க : பொது இடங்களில் இருக்கும் வைஃபை பயன்படுத்துகிறீர்களா?.. உஷார்.. இந்த சிக்கல்களை நினைவில் கொள்ளுங்கள்!

Follow Us