AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பொது இடங்களில் இருக்கும் வைஃபை பயன்படுத்துகிறீர்களா?.. உஷார்.. இந்த சிக்கல்களை நினைவில் கொள்ளுங்கள்!

Public Wi-Fi Issue | மால்கள், கடைகள், திரையறங்குகள், ரயில் நிலையங்கள் என பல இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேவையை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த இலவச வைஃபைக்கு முன்பு மறைந்திருக்கும் சிக்கல்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பொது இடங்களில் இருக்கும் வைஃபை பயன்படுத்துகிறீர்களா?.. உஷார்.. இந்த சிக்கல்களை நினைவில் கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 06 May 2026 16:28 PM IST

தற்போதைய சூழலில் உலகமே நவீன மயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் செல்போன்கள் முதல், தொலைக்காட்சி, லேப்டாப்கள் என அனைத்திற்கு இணைய வசதி மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இவ்வாறு பல்வேறு இடங்களில் இணைய வசதி தேவைப்படும் நிலையில், பல இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படுகிறது. இந்த சேவையை பலரும் பயன்படுத்துகின்றனர். ஆனால், அதில் இருக்கும் ஆபத்து பலருக்கும் தெரிவதில்லை. அதாவது, இந்த பொது இடங்களில் இருக்கும் வைஃபை மூலம் ஒருவரின் தகவல்கள் மற்றும் தரவுகள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பொது இடங்களில் இருக்கும் வைஃபை – பயன்படுத்துவது ஆபத்து?

சென்னை உள்ளிட்ட நகரங்களில் மால்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என பல இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படுகிறது. இந்த சேவையை ஏராளமான பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருகின்றனர்.

நீங்கள் பொது இடங்களில் உள்ள வைஃபையில் உங்களது ஸ்மார்ட்போனை இணைக்கும்போது, பாதுகாப்பற்ற ஒரு அமைப்பில் உங்களது ஸ்மார்ட்போன் இணைக்கப்படும். இது ஹேக்கர்கள் சுலபமாக உங்களது ஸ்மார்ட்போனை அணுக வழிவகை செய்யும். இதன் மூலம் ஒருவரின் ஸ்மார்ட்போனில் உள்ள தரவுகள் மற்றும் தகவல்கள் மிக சுலபமாக திருடப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : Amazon Great Summer Sale 2026: ஸ்மார்ட்போன் முதல் வீட்டு உபகரணங்கள் வரை பெரிய தள்ளுபடி – எப்போ தெரியுமா?

ஹேக்கர்கள் எப்படி சுலபமாக உங்களை அணுகுவார்கள்?

  • பாஸ்வேர்டுகள்
  • ஓடிபி
  • இமெயில் மற்றும் குறுஞ்செய்திகள்

மேற்குறிப்பிடப்பட்டுள்ள இவை அனைத்தும் பொது இடங்களில் உள்ள வைஃபை சேவையை நீங்கள் பயன்படுத்தும்போது உங்களை ஹேக்கர்கள் குறிவைக்க உதவும் அம்சங்களாக உள்ளன.

இதையும் படிங்க : நத்திங் முதல் ரியல்மி வரை.. அதிரடியாக விலை உயர்த்தப்பட்ட ஸ்மார்ட்போன்கள்!

பொது இடங்களில் உள்ள வைஃபையில் உள்ள சிக்கல்கள்

  1. ஹேக்கர்கள் உங்களது சமூக ஊடக கணக்குகளின் லாக் இன் விவரங்களை திருடுவார்கள்.
  2. யுபிஐ உள்ளிட்ட பண பரிமாற்ற செயலிகளின் தகவல்களை திருடி, பணத்தை கொள்ளையடிக்கும் வாய்ப்பு உள்ளது.
  3. மால்வேர் மற்றும் ஸ்பைவேர் தாக்குதல்கள் நடத்தி அதன் மூலம் மோசடிகளும் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன.

Follow Us