AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Amazon Great Summer Sale 2026: ஸ்மார்ட்போன் முதல் வீட்டு உபகரணங்கள் வரை பெரிய தள்ளுபடி – எப்போ தெரியுமா?

உலக அளவில் முன்னணி ஈ-காமர்ஸ் தளமான அமேசான் தனது கிரேட் சம்மர் சேல் 2026 விற்பனையை அறிவித்திருக்கிறது. இந்த தள்ளுபடி விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை குறைந்த விலையில் வாங்க முடியும். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Amazon Great Summer Sale 2026: ஸ்மார்ட்போன் முதல் வீட்டு உபகரணங்கள் வரை பெரிய தள்ளுபடி – எப்போ தெரியுமா?
Amazon Great Summer Sale 2026
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 03 May 2026 19:38 PM IST

உலக அளவில் முன்னணி ஈ-காமர்ஸ் தளமான அமேசான் தனது கிரேட் சம்மர் சேல் 2026 விற்பனையை அறிவித்திருக்கிறது. இந்த தள்ளுபடி விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை குறைந்த விலையில் வாங்க முடியும். மேலும் கடைகளுக்கு செல்லும் அலச்சல் குறைவு என்பதால் மக்கள் இந்த அமேசான் தள்ளுபடி விற்பனைய மக்கள் அதிகம் விரும்புகின்றனர். இந்த நிலையில் அமேசானின் கிரேட் சம்மர் சேல் 2026 விற்பனை மே 8, 2026 முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது. குறிப்பாக பிரைம் உறுப்பினர்களுக்கு முன் கூட்டியே இந்த தள்ளுபடிகளை பெற முடியும்.

மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் கிரேட் சம்மர் சேல் வருகிற மே 8, 2026 முதல் விற்பனை தொடங்கப்படுகிறது. அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பே இந்த தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் அதிரடி தள்ளுபடிகள் வழங்கப்படும் உள்ள பொருட்களை மக்கள் உடனடியாக வாங்க முடியும்.

இதையும் படிக்க : இன்வர்டர் ஏசி vs கன்வர்டெபிள் ஏசி: எது மின் செலவை குறைக்கும்? எது சிறந்த குளிர்ச்சி தரும்?

வங்கி தள்ளுபடிகள் மற்றும் கேஷ் பேக் ஆஃபர்கள்

இந்த விற்பைனைக்கு சில வங்கிகளுக்கு சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அதன் படி அமேசான் எச்டிஎஃப்சி பேங்க் காரடுகளுக்கு 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும். அதே போல அமைசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு கேஷ்பேக் ஆஃபர்ஸ் கிடைக்கும். குறிப்பாக ரூ.1,250 வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும் சில பொருட்களுக்கு ரூ. 2,500 வரை கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.

ஸ்மார்ட்போன்கள் லேப்டாப்கள் ஆகியவற்று பல சிறப்பு தள்ளுபடிகள் அறிவிக்கப்படவுள்ளன. அதே போல சாம்சங், ஜியோமி, iQOO போன்ற பிரபல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு பெரிய தள்ளுபடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : உங்களுக்கு NDMA-ல் இருந்து எச்சரிக்கை வந்ததா?.. கவலைப்பட வேண்டாம்.. இதுதான் காரணம்!

மேலும் அதோடு, லேப்டாப்கள், டேப்லட்கள், ஹெட்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் போன்ற பொருட்களுக்கு சிறப்பு ஆஃபர்களும் கிடைக்கின்றன. மேலும் ஏர் கண்டிஷனர், ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஸ்மார்ட் டிவி போன்றவை குறைந்த விலையில் கிடைக்கும். ஆனால் இந்த ஆஃபர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே கிடைக்கும். அதனால் அறிவிப்புகளை சரியாக கவனித்து சரியான நேரத்தில் ஆர்டர் செய்தால் மிகப்பெரிய சேமிப்பு கிடைக்கும். குறிப்பாக கோடைகாலம் தொடங்கியுள்ளதால் ஏசி வாங்க நினைப்பவர்கள் இந்த சேலை பயன்படுத்திக்கொள்ளளலாம். மேலும் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் வாங்க நினைப்பவர்கள் இந்த சேல் மூலம் குறைந்த விலையில் வாங்க முடியும் என்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வது நல்லது.

Follow Us