AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போனில் நேரக் கட்டுப்பாட்டை உருவாக்குவது எப்படி? விவரம் இதோ

How to Limit Screen Time for Kids : ஸ்மார்ட்போன்களில் நன்மைகள் இருப்பது போலவே, ஏராளமான தீமைகளும் உள்ளன. எனவே குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை கண்காணிப்பது அவசியம். தற்போது குழந்தைகள் அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவது பெற்றோர்களுக்கு கவலையாக மாறியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போனில் நேரக் கட்டுப்பாட்டை உருவாக்குவது எப்படி? விவரம் இதோ
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 30 Apr 2026 21:10 PM IST

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். இதனையடுத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. ஸ்மார்ட்போன்களில் நன்மைகள் இருப்பது போலவே, ஏராளமான தீமைகளும் உள்ளன. எனவே குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை கண்காணிப்பது அவசியம். தற்போது குழந்தைகள் அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவது பெற்றோர்களுக்கு கவலையாக மாறியுள்ளது. ஆன்லைன் வகுப்புகள், யூடியூப் வீடியோக்கள் மற்றும் கேம்ஸ் காரணமாக அவர்கள் நீண்ட நேரம் பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது. இதனையடுத்து அவர்கள் போன் பார்ப்பதை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகியுள்ளது.

குழந்தைகள் போன் பார்க்கும் நேரத்தை கட்டுப்படுத்த வேண்டும்?

அதிக நேரம் ஸ்மார்ட்போன் பார்க்கும் குழந்தைகளுக்கு கவன சிதறல் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அவர்களின் தூக்கம், உடல் மற்றும் மன நலன் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் அவர்களின் எதிர்காலத்தை வெகுவாக பாதிக்கக்கூடும். இதனால் சிறிய வயதிலேயே இருந்து அவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நேரத்தை கட்டுப்படுத்துவது அவசியம்.

இதையும் படிக்க : கோடைகாலத்தில் வெப்பமடையும் ஸ்மார்ட்போன்கள் – இதை கவனிக்கலனா ஆபத்து!

இதற்காக செட்டிங்ஸ் சென்று Apps அல்லது Digital Wellbeing / Screen Time என்பதை தேர்வு செய்யவும். அதில் நாம் பயன்படுத்தும் செயலிகள் விவரங்களை பார்க்க முடியும். ஒவ்வொரு செயலிகளுக்கும் அருகில் ஹவர்கிளாஸ் என்ற ஐகான் இருக்கும். அந்த செயலியை பயன்படுத்தும் நேரத்தை இதில் நிர்வகிக்கலாம். ஒரே நேரத்தில் பல செயலிகளுக்கும் நேரக் கட்டுப்பாட்டை நிர்வகிக்க முடியும்.

ஐபோனில் இந்த வசதி ஸ்கிரீன் டைம் என்ற பெயரில் இருக்கும். இதற்காக உங்கள் ஐபோனில் Settings பகுதிக்கு சென்று Screen Time என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுக்கவும். பாஸ்கோட் அமைத்துக்கொள்ளவும், அதில் Add Limit என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். அதில் நாம் எந்த செயலிக்கு நேரக்கட்டுப்பாடு தேவையா அதனை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் அந்த செயலிக்கு நேரக் கட்டுப்பாட்டை அமைக்கலாம். நாம் நேரக்கட்டுப்பாடு விதித்தவுடன் அந்த நேரத்துக்கு பிறகு அந்த செயலி தானாகவே லாக் ஆகும்.

இதையும் படிக்க : செப்டம்பர் முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது.. அதிரடி அறிவிப்பு!

13 வயதிற்கு மேல் குழந்தைகளுக்கு நேரக் கட்டுப்பாடு அம்சங்களுடன் பயன்படுத்தக் கொடுக்கலாம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் அதற்குமுன் அதில் உள்ள சாதக பாதக அம்சங்களை நாம் அவர்களுக்கு தெளிவாக கற்றுக்கொடுக்க வேண்டும். மேலும் அவர்களின் பயன்பாட்டை முழுமையாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.

குறிப்பாக சமூக வலைதள மோசடிகளில் அவர்கள் சிக்காமல் இருக்க முறையான கண்காணிப்பு அவசியம். இன்றைய காலகட்டத்தில் படிப்பு உள்ளிட்ட விஷயங்களால் குழந்தைகளை ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் தவிர்க்க முடியாது என்றாலும், முறையான கண்காணிப்பு அவசியம்.

Follow Us