செப்டம்பர் முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது.. அதிரடி அறிவிப்பு!
WhatsApp Will Not Work On These Model Smartphones | தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் முக்கிய செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. இந்த நிலையில், 2026 செப்டம்பர் மாதம் முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான மக்களால் வாட்ஸ்அப் இல்லாமல் தங்களது அன்றாட வாழ்வில் இயங்கவே முடியாது. அத்தகைய மிக முக்கிய செயலியாக இது உள்ளது. இந்த நிலையில் தான், செப்டம்பர் 2026 முதல் சில ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எந்த எந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
2026 செப்டம்பர் முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது
வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய புதிய அறிவிப்புகள் மற்றும் அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், குறிப்பிட்ட சில மாடல் ஸ்மார்ட்போன்களில் செப்டம்பர் மாதம் முதல் வாட்ஸ்அப் இயங்காது என தெரிவித்துள்ளது. அதாவது, ஆண்ட்ராய்டு 6.0-க்கும் (Android 6.0) குறைவான இயங்குதளம் கொண்டுள்ள ஸ்மார்ட்போன்களில் 2026 செப்டம்பர் மாதம் வாட்ஸ்அப் இயங்காது என தெரிவிக்கப்படுள்ளது.
இதையும் படிங்க : ஏஐ கருவி மூலம் மனிதர்களின் கனவுகளை கட்டுப்படுத்த முடியும்.. Prophetic நிறுவனம் கொடுக்கும் வாக்குறுதி!




ஆண்ட்ராய்டு 6.0-க்கும் குறைவான இயங்குதளங்களில் செயல்படாது
தற்போது 5.0 ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் அதற்கு மேற்பட்ட இயங்குதளங்களில் வாட்ஸ்அப் செயலி இயங்கி வருகிறது. வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு அட்வான்ஸ்டு அம்சங்களை செயலியில் அறிமுகம் செய்து வருகிறது. இந்த அம்சங்களை பயன்படுத்த அட்வான்ஸ்டு இயங்குதளம் தேவை என்பதால் அந்த நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.
இதையும் படிங்க : வாட்ஸ்அப் டிசைனில் மிகப்பெரிய அப்டேட் – என்னென்ன மாற்றங்கள் வரப்போது?
இந்த முடிவின் மூலம் ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் 5.1 உள்ளிட்ட இயங்குதளம் கொண்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் செப்டம்பர் மாதம் முதல் வாட்ஸ்அப் செயலி இயங்காது. இதனை பயனர்களுக்கு அறிவிக்கும் விதமாக, இது தொடர்பான அறிவிப்பு ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் 5.1 உள்ளிட்ட இயங்குதளங்களில் இயங்கும் வாட்ஸ்அப் கணக்குகளில் தோன்றி வருகிறது. எனவே வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்த விரும்பும் பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனை ஆண்ட்ராய்டு 6.0-க்கு மேற்பட்ட இயங்குதளம் கொண்டதாக மாற்ற வேண்டியது கட்டாயமாக உள்ளது. இல்லை என்றால் அவர்களால் தொடர்ந்து தங்களது ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.