AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஏஐ கருவி மூலம் மனிதர்களின் கனவுகளை கட்டுப்படுத்த முடியும்.. Prophetic நிறுவனம் கொடுக்கும் வாக்குறுதி!

AI Device To Control Human Dreams | செயற்கை நுண்ணறிவு அம்சம் எழுதுவது, கோடிங் உள்ளிட்ட பல்வேறு செயல்களை செய்கிறது. இந்த நிலையில், ப்ரொபெட்டிக் என்ற நிறுவனம் தனது ஏஐ கருவில் மூலம் மனிதர்களின் கனவை கட்டுப்படுத்த முடியும் என்று கூறியுள்ளது.

ஏஐ கருவி மூலம் மனிதர்களின் கனவுகளை கட்டுப்படுத்த முடியும்.. Prophetic நிறுவனம் கொடுக்கும் வாக்குறுதி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 26 Apr 2026 18:14 PM IST

தொழில்நுட்பத்தின் (Technology) உச்சமாக செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சம் உள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் மூலம் ஏராளமான விஷயங்களை நொடி பொழுதில் செய்ய முடியும். இதுவரை செயற்கை நுண்ணறிவு அம்சம் கோடிங் செய்தது, எழுதியது, மனிதர்களின் வேலைகளை செய்தது குறித்து கேள்விப்பட்டு இருப்போம், சிலர் அதனை பயன்படுத்தி இந்த பணிகளையும் முடித்திருப்பர். ஆனால், செயற்கை நுண்ணறிவு அம்சம் உங்களது கனவுகளை கட்டுப்படுத்த உதவும் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா. உண்மை தான், Prophetic என்ற நிறுவனம் தான், தங்களது செயற்கை நுண்ணறிவு கருவி மூலம் மனிதர்களின் கனவுகளை கட்டுப்படுத்த முடியும் என்று கூறியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கனவுகளை கட்டுப்படுத்தும் செயற்கை நுண்ணறிவு கருவி

ப்ரொபெட்டிக் என்ற நிறுவனம் செயற்கை நுண்ணறிவு அம்சத்துடன் கூடிய கருவி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அந்த கருவி மனிதர்களின் கனவுகளை கட்டுப்படுத்தும் என அந்த நிறுவனம் கூறுகிறது. அந்த கருவி 449 அமெரிக்க டாலர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.42,300 ஆகும். இந்த நிறுவனம் கூறுவதை போலவே அந்த கருவி மனிதர்களின் கனவுகளை கட்டுப்படுத்துமா?.

இதையும் படிங்க : ஃபேஸ்புக்கை போலவே வாட்ஸ்அப்பிலும் Notification Bubbles அம்சம்.. மெட்டா முக்கிய அறிவிப்பு!

இந்த கருவி எப்படி செயல்படும்?

இந்த கருவி எப்படி செயல்படும் என்பது குறித்து அந்த நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதாவது, இந்த கருவி பாதுகாப்பான அல்ட்ராசோனிக் எனர்ஜியை நெற்றி மூலம் Prefrontal Cortex மற்றும் Frontoparietal Network-க்கு அனுப்பும். இது இரவு தூங்கும் நேரத்தில் செயல்படாது. இந்த அமைப்பை தூண்டுவதன் மூலம் கனவுகளை கட்டுப்படுத்த முடியும் என்று அந்த நிறுவனம் கூறுகிறது.

Follow Us