AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மாணவர்கள் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டிய சிறந்த 5 ஏஐ டூல்கள்

Best AI Tools : மாணவர்களின் வாழ்க்கையில் அசைன்மெண்ட், காலேஜ் பிரசன்டேஷன், தேர்வுக்கு தயாராவது என போன்ற பல வேலைகளை ஏஐ கருவிகள் மிக எளிமையாக மாற்றியிருக்கிறது. இதன் மூலம் அவர்கள் வேலை பாதியாக குறைகிறது. இந்த நிலையில் மாணவர்களுக்கு உதவும் சிறந்த 5 ஏஐ கருவிகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மாணவர்கள் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டிய சிறந்த 5 ஏஐ டூல்கள்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 24 Apr 2026 15:18 PM IST

கல்லூரி மாணவர்களின் தினசரி வாழ்க்கையில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு கருவிகள் முக்கிய பங்கு வகிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக மாணவர்களின் வாழ்க்கையில் அசைன்மெண்ட், காலேஜ் பிரசன்டேஷன், தேர்வுக்கு தயாராவது என போன்ற பல வேலைகளை ஏஐ கருவிகள் மிக எளிமையாக மாற்றியிருக்கிறது. இதன் மூலம் அவர்கள் வேலை பாதியாக குறைகிறது. ஏஐ கருவியை முழுமையாக நம்பாமல் அதனை வேலைகளை எளிதாக்கும் கருவியாக மட்டுமே பயன்படுத்துவது சிறந்தது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் மாணவர்களுக்கு உதவும் சிறந்த 5 ஏஐ கருவிகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

Ryne AI

எந்தவித வகுப்புகளுக்கும் செல்லாமல் சுயமாக ஒரு கோர்ஸை தேர்ந்தெடுத்து படிக்கும் பாணவர்களுக்கு இந்த ஏஐ டூல் உதவிகரமாக இருக்கும். இந்த ஏஐ டூல் மாணவர்களின் கேள்விகளுக்கு துல்லியமான பதில்களை பெற உதவும். சாட்ஜிபிடி, ஜெமினி போன்று கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் துல்லியமான பதில்களை வழங்குககிறது. கேள்விகளுக்கு உடனுக்கு உடன் பதில்களை பெறலாம்.

இதையும் படிக்க :  உங்கள் போனை வேறு யாரும் கண்காணிக்கிறார்களா? எப்படி தெரிந்துகொள்வது?

Studygenie

ஒரு புதிய விஷயங்களை கற்கும்போது அதனை கலந்துரையாடல் முறையில் சுவாரசியமான கற்றலை இந்த ஏஐ டூல் நமக்கு வழங்கும். குறிப்பாக நோட்ஸ் அப்லோடு செய்தால் அதற்கான கேள்வி பதில்களை உருவாக்கி கொடுக்கும். நாம் தவறான பதிலளித்தார். அதற்கு சரியான விளக்கம் கொடுக்கும். மேலும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகிறவர்களுக்கு இந்த ஏஐ கருவி மிக பயனுள்ளதாக இருக்கும்.

PDF.ai

நம் பாடங்களை பிடிஎஃப் ஆக அப்லோட் செய்தால் அதில் உள்ள முக்கிய தகவல்களை மட்டும் நமக்கு வழங்கும். அதாவது நமக்கு தேவையானவற்றை நம் புரிந்துகொள்ளும் வகையில் எளிதாக கொடுக்கும்.

Gamma AI

கல்லூரிில் பிரசன்டேஷன் செய்ய இந்த ஏஐ டூல் நமக்கு மிக உதவும். டாபிக் கொடுத்தால் முழு பிரசன்டேசனையும் சில நிமிடங்களில் உருவாக்கி கொடுக்கும். நம் பிரசன்டேஷனின் ஒவ்வொரு ஸ்லைடிலும் நாம் சேர்க்க வேண்டியவற்றை சொன்னால் போதும். நம் தேவைக்கு ஏற்ப எடிட் செய்து கொடுக்கும்.

இதையும் படிக்க : ஏஐ மனிதர்களின் சிந்திக்கும் திறனை குறைத்துவிடும்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Jenni Ai

ஆய்வு கட்டுரைகள், அசைன்மென்ட் போன்ற எழுதுவதற்கு தேவையான கண்டென்ட்களை இந்த ஏஐ நமக்கு உதவும். குறிப்பாக ஒரு குறிப்பிட்ட டாபிக்கை கொடுத்தால் முழுமையான டேட்டா விவரங்களை திரட்டி தரும். ஆய்வுகள் மேற்கொள்பவர்களுக்கு இந்த செயலி மிகச் சிறந்த உதவியாக இருக்கும்.

Follow Us