ஏஐ மனிதர்களின் சிந்திக்கும் திறனை குறைத்துவிடும்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
Artificial Intelligence Will Weaken Human Thinking | தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், மனிதர்கள் அனைத்து தேவைகளுக்கும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயன்படுத்தும் வகையில், அவர்களின் சிந்திக்கும் திறனை பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மனிதர்கள் தங்களது அன்றாட வாழ்வில் சிறிய சிறிய வேலைகளுக்கு கூட செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சத்தை பயன்படுத்தி வரும் நிலையில், அவர்களின் சிந்திக்கும் திறன் மிக கடுமையாக பாதிக்கும் ஆபத்துக்கள் உள்ளதாக சமீபத்திய ஆய்வு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த சமீபத்திய ஆய்வு செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் மனிதர்கள் எப்படி சிந்திக்கிறார்கள், பிரச்னைகளுக்கு தீர்வு காண்கிறார்கள், கற்றுக்கொள்கிறார்கள் என்பதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு அம்சம் குறித்து ஆய்வு கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அன்றாட வாழ்வில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயன்படுத்தும் மக்கள்
தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், தற்போது தொழில்நுட்பத்தின் உச்சமாக செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு அம்சம் நொடி பொழுதில் கேள்விகளுக்கு விடை அளிப்பதன் காரணமாக சிறிய விஷயங்கள் முதல் பெரிய விஷயங்கள் வரை என அனைத்திற்கும் பலரும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். பலரும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பகிர்ந்துக்கொள்வது, தனிப்பட்ட வாழ்க்கையில், உறவுகளில் இருக்கும் சிக்கல்களுக்கு கூட செயற்கை நுண்ணறிவு அம்சத்திடம் தீர்வு கேட்க தொடங்கிவிட்டனர்.
இதையும் படிங்க : ஸ்பேம் மெசேஜ்கள் குறித்து கவலை இல்லை.. வாட்ஸ்அப்பில் வரும் அசத்தல் அம்சம்!




ஏஐ பயன்பாடு – மனிதர்களின் சிந்திக்கும் திறன் குறையும்
இவ்வாறு தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு அம்சங்களை பயன்படுத்தும் பொதுமக்கள், அவை இல்லாதபோது கடுமையான சவால்களை எதிர்க்கொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு அம்சங்களை பயன்படுத்துவது, மனிதர்கள் சுயமாக சிந்திப்பதை பாதிக்கும். இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் மனிதர்கள் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட செயற்கை நுண்ணறிவு இல்லாமல் செயல்பட முடியாமல் போய்விடும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க : லேப்டாப் வாங்கபோறீங்களா? இது தெரியாவிட்டால் உங்கள் பணம் வீணாகலாம்
குறிப்பாக லேப்டாப்பை எப்படி ஆஃப் செய்வது என்பதை கூட மனிதர்கள் ஏஐ இடம் கேட்க தொடங்கிவிடுவார்கள் என கூறப்படுகிறது. முன்பு ஏதேனும் ஒரு விஷயம் குறித்து தேட வேண்டும் என்றால் கூகுள் சர்ச், யூடியூப் வீடியோக்கள் ஆகியவற்றை பார்ப்பார்கள். ஆனால், தற்போது அந்த அளவு கூட தேடுதல் இல்லை. நொடி பொழுதில் தேட முடிகிறது. இது மனிதர்கள் செயற்கை நுண்ணறிவு அம்சம் இல்லாமல் செயல்பட முடியாது என்ற நிலையை உருவாக்கிவிடும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.