AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தேர்தலில் வாக்களிக்க பூத் சிலிப் கட்டாயம்.. ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி?

Download Booth Through Online | தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலில் வாக்களிக்க ஆன்லைன் மூலம் பூத் சிலிப் பதிவிறக்கம் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தேர்தலில் வாக்களிக்க பூத் சிலிப் கட்டாயம்.. ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி?
கோப்பு புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Apr 2026 12:01 PM IST

தமிழகத்தில் விரைவில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் (2026 Tamil Nadu Assembly Election) நடைபெற உள்ளது. அதாவது ஏப்ரல் 23, 2026 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்களிக்க எஸ்ஐஆர் தீவிர திருத்த பட்டியலில், வாக்களரின் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும். பட்டியலில் பெயர் இருக்கும் நபர்களுக்கு வாக்களிக்க உரிமை உள்ளது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க பூத் சிலிப் (Booth Slip) கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் மூலம் பூத் சிலிப் பதிவிறக்கம் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தேர்தலில் வாக்களிக்க பூத் சிலிப் கட்டாயம்

தேர்தலில் வாக்களிக்க அடையாள ஆவணங்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு பூத் சிலிப்பும் மிக முக்கியமாக உள்ளது. தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கும் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், வெளியூரில் வசிக்கும் நபர்களுக்கு பூத் சிலிப் வாங்குவது சற்று சவாலானதாக இருக்கலாம். இந்த நிலையில், தேர்தல் அன்று தான் சொந்த ஊருக்கு செல்ல முடியும், பூத் சிலிப் வாங்க முடியாது என்பவர்கள் இணையத்தில் இருந்து மிக சுலபமாக பூத் சிலிப்பை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமாக உள்ள ஐபோன் ஃபோல்டு.. முக்கிய அம்சங்கள்!

ஆன்லைனில் பூத் சிலிப் பதிவிறக்கம் செய்வது எப்படி?

  1. அதற்கு முதலில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ https://electoralsearch.eci.gov.in/ என்ற இணைய தளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அங்கு கொடுக்கப்பட்டுள்ள Search By Epic என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  3. அதில் நீங்கள் எந்த மொழி தேவையோ அதனை தேர்வு செய்துக்கொள்ளலாம்.
  4. பிறகு உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் இருக்ககூடிய Epic எண்ணை உள்ளிட வேண்டும்.
  5. பிறகு உங்களது மாநிலத்தை தேர்வு செய்து கேப்சா கோடையும் உள்ளிட வேண்டும்.
  6. ஒருவேளை உங்களிடம் Epic எண் இல்லை என்றால் பெயர், பிறந்த தேதி, தொகுதி உள்ளிட்ட விவரங்களை உள்ளிட வேண்டும்.
  7. நீங்கள் இந்த விவரங்களை பதிவிட்டது உங்களது முழு வாக்காளர் விவரங்கள் தோன்றும்.
  8. அதில் தோன்றும் Action என்ற ஆப்ஷனை கிளிக் செய்து , View Details என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
  9. அப்போது உங்களது பூத் சிலிப் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : கார் ஏசியை பாதுகாக்க கட்டாயம் பின்பற்ற வேண்டிய முக்கிய விஷயங்கள்!

மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றி மிக சுலபமாக உங்களது பூத் சிலிப்பை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us