AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சாட்ஜிபிடியை நம்பி தவறாக நடந்துகொண்ட முன்னாள் காதலர் – ஓபன்ஏஐ மீது வழக்கு தொடர்ந்த பெண்

AI Harassment Case : மக்கள் சிறிய விஷயங்களுக்கு கூட சாட்ஜிபிடி போன்ற ஏஐ கருவிகளை நம்பியிருக்க தொடங்கியிருக்கின்றனர். இந்த நிலையில் சாட்ஜிபிடியின் அறிவரையைக் கேட்டு முன்னாள் காதலர் தன்னை துன்புறுத்தியதாக பெண் ஓபன் ஏஐ மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். அது குறித்து பார்க்கலாம்.

சாட்ஜிபிடியை நம்பி தவறாக நடந்துகொண்ட முன்னாள் காதலர் – ஓபன்ஏஐ மீது வழக்கு தொடர்ந்த பெண்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 12 Apr 2026 16:48 PM IST

உலகம் முழுவதும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் சிறிய அன்றாட விஷயங்களுக்கு கூட சாட்ஜிபிடி போன்ற ஏஐ செயலிகளை சார்ந்து வாழ தொடங்கியிருக்கின்றனர். மருத்துவம் போன்ற மிக முக்கியமான விஷயங்களுக்கு கூட ஏஐ கருவிகளிடம் கருத்து கேட்கும் நிலை இருக்கிறது. இதனால் அவ்வப்போது சர்ச்சையும் உருவாகியுள்ளது. அந்த வகையில் பெண் ஒருவர் ஓபன்ஏஐ நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது புகாரில் அவரது முன்னாள் காதலர் சாட்ஜிபிடியின் தவறான அறிவுறைின் காரணமாக தன்னை துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

சாட்ஜிபிடியை நம்பி பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட இளைஞர்

செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டைச் சுற்றி அதிர்ச்சியூட்டும் ஒரு வழக்கு தற்போது வெளிவந்துள்ளது. ஒரு பெண், ஓபன் ஏஐ மீது வழக்கு தொடர்ந்துள்ளார். சாட்ஜடபிடியை பயன்படுத்திய தனது முன்னாள் காதலன், அதன் பதில்களால் தவறான பாதைக்கு தள்ளப்பட்டு ஸ்டாக்கிங் போன்ற ஆபத்தான முறையில் நடந்துகொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : நமக்கு கிடைக்கும் 5ஜி பிளான் உண்மையில் அன்லிமிட்டடா? உண்மை என்ன?

இது தொடர்பாக அவர் தனது புகாரில், கடந்த 2024 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்த பிறகு, தனது முன்னாள் காதலர் ஜிபிடி 40  என்ற அப்டேட்டை அதிகமாக பயன்படுத்தத் தொடங்கினார். ஆரம்பத்தில் தனது பிரேக் அப் குறித்து புரிந்துகொள்ள அவர் ஏஐயுடன் உரையாடத் தொடங்கியிருக்கிறார். ஆனால் காலப்போக்கில் அவரது மனநிலை மாறி, தன்னை ஒரு முக்கியமான நபராகவும், யாரோ தன்னை கண்காணித்து வருவதாகவும் நம்பத் தொடங்கியிருக்கிறார்.

மேலும் சாட்ஜிபிடி அந்த நபரின் தவறான நம்பிக்கைகளை பற்றி அவருக்கு உணர்த்தாமல் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வந்திருக்கிறது. குறிப்பாக,  தனது முன்னாள் காதலர்  தன்னைப் பற்றிய விவரங்களை அளித்து, சாட்ஜிபிடியிடம் கேட்டபோது,  அந்த பெண் நம்பகத்தன்மை அற்றவர் என்று பதிலளிக்கிறது.

இதனையடுத்து அவரின் நடத்தை மேலும் மோசமாக்கியதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக, அந்த நபர் அந்த பெண்ணை தொடர்ந்து தொந்தரவு செய்ததாகவும், தனது செயல்களை நியாயப்படுத்த ஏஐ பதில்களை பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ஜிபேயில் உருவெடுத்துள்ள புதிய மோசடி?.. இணையத்தில் வைரலாகும் தகவல் உண்மையானதா?

இந்த சம்பவம், ஏஐ பயன்பாட்டின் பாதுகாப்பு மற்றும் அதன் பொறுப்பு குறித்து பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது. முன்னதாகவும் இதுபோன்ற சம்பவங்கள் வெளியாகியுள்ளதால், மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏஐ பயன்பாட்டில் கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்றன என நிபுணர்கள் கூறுகின்றனர். மொத்தத்தில், இந்த வழக்கு, செயற்கை நுண்ணறிவு கருவிகளின் பயன்பாட்டில் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் பொறுப்புணர்வு அவசியம் என்பதை வலியுறுத்தும் ஒரு முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.

Follow Us