வங்கி கணக்கு காலியாகலாம்… ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
Android Malware Alert: ஆண்ட்ராய்டு போன்களில் காட் மோடு மால்வேர் வேகமாகப் பரவி வருகிறது. இது அரசின் அதிகாரப்பூர்வ செயலிகள் போல வேடமிட்டுத் தாக்குதல்களைத் தொடுக்கும். இது வங்கி தகவல்கள் போன்ற முக்கிய டேட்டாக்களை ஹேக்கர்கள் பெற உதவும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மொபைல் பயனர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனர்கள் இந்த பிரச்னையில் அதிகம் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு காட் மோடு என்று அழைக்கப்படும் ஒரு அபாயகரமான மால்வேர் வேகமாகப் பரவி வருகிறது. இந்த மால்வேர், போலிச் செயலிகள் மூலம் ஸ்மார்ட்போன்களில் ஊடுருவி, பயனர்களின் தனிப்பட்ட மற்றும் வங்கித் தகவல்களைத் திருடும் திறன் கொண்டது. ஒரு கணம் கவனக்குறைவாக இருந்தால்கூட உங்கள் வங்கிக் கணக்கு முழுவதுமாகக் காலியாகிவிடும் என்று அரசு வெளிப்படையாகக் கூறியுள்ளது.
போலி செயலிகள் மூலம் தாக்குதல்
இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் இந்த மால்வேரைக் கண்டறிந்துள்ளது. வங்கி மற்றும் அரசு செயலிகளை போல போலியான செயலிகளை உருவாக்கி, இந்த மால்வேர் மக்களை வலையில் சிக்க வைக்கிறது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மோசடி செயலிகள், எஸ்பிஐ யோனா (SBI YONO) , ஆர்டிஓ இ – சலான், வாடிக்கையாளர் சப்போர்ட் போன்ற சேவைகளின் போர்வையில் தோன்றி தாக்கக்கூடியது.




இதையும் படிக்க : வீட்டில் இந்த பிரச்னை இருக்கா? உங்கள் WiFi Router மாற்ற வேண்டிய நேரம் இதுதான்
இதனை உண்மை என்று நம்பி பதிவிறக்கம் செய்யும் வாடிக்கையாளர்கள், இந்தச் செயலிகளை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து, அவை படிப்படியாக பயனரின் டேட்டாவை அணுகத் தொடங்குகின்றன. இதுவே இணையவழி மோசடி நடவடிக்கையின் தொடக்கமாகும்.
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
I4C, MHA has issued an advisory warning citizens about sophisticated Android malware known as “Android God Mode”, which misuses Accessibility permissions to gain unauthorized control over devices.
🔗 Read the complete advisory here: https://t.co/B4NBrDvGEG #AndroidMalware pic.twitter.com/CkgYYvgagV
— CyberDost I4C (@Cyberdost) March 30, 2026
உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுரையில், இந்த மால்வேருக்கு நாம் பெர்மிசன் கொடுத்தவுடன் அந்தச் செயலி தொலைபேசியின் கிட்டத்தட்ட ஒவ்வொரு செயல்பாட்டையும் அணுகுகிறது. இந்த அணுகல் மூலம், ஹேக்கர்களால் பயனரின் போன் ஸ்கீரினை பார்க்கவும், பாஸ்வேர்டுகளைப் படிக்கவும், வங்கி விவரங்களை அணுகவும் முடியும். பெரும்பாலும், இது நடப்பது பயனருக்கு முற்றிலும் தெரியாது. இதுவே இது மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுவதற்குக் காரணம். பயனரின் அறிவுக்கு எட்டாமல் சாதனத்தின் மீது முழுமையான கட்டுப்பாட்டை இது எடுத்துக்கொள்ளும்.
இதையும் படிக்க : உங்கள் ஸ்மார்ட்போன் பாதுகாப்பாக இருக்க இந்த சில விஷயங்களை பண்ணுங்க!
இதனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
செயலிகளை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது பிற நம்பகமான தளங்களிலிருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்யுமாறு அரசg பயனர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அறிமுகமில்லாத செயலிகளுக்கு அணுகல் அனுமதிகளை வழங்குவதைத் தவிர்க்கவும். வாட்ஸ்அப் அல்லது பிற தளங்கள் வழியாகப் பெறப்படும் இணைப்புகள் மற்றும் ஏபிகே ஃபைல்கள் குறித்து பயனர்கள் குறிப்பாக எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒரு செயலி சந்தேகத்திற்குரியதாகத் தோன்றினால், அதை உடனடியாக நீக்கிவிட்டு, அதன் அனுமதிகளைச் சரிபார்க்கவும். சைபர் மோசடிக்கு எவரேனும் ஆளானால், அவர்கள் 1930 என்ற உதவி எண்ணை அழைக்கலாம் அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம். பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுமாறும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.