அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான ரெட்மி 15ஏ.. அதுவும் பட்ஜெட் விலையில்!
Redmi 15 A Smartphone Launched In India | ரெட்மி நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், ரெட்மி 15 ஏ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்திய ஸ்மார்ட்போன் (Smartphone) சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனம் தான் ரெட்மி (Redmi). இந்த நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது ரெட்மி 15ஏ ஸ்மார்ட்போனை (Redmi 15A Smartphone) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரெட்மி 15ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
ரெட்மி நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரெட்மி 15ஏ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக ரெட்மி நிறுவனம் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.9 இன்ச் HD+ டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இது 6ஜிபி LPDDR4X RAM மற்றும் 128 UFS 2.2 ஸ்டோரேஜ் அம்சத்தை கொண்டுள்ளது.
இதையும் படிங்க : டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி இந்தியாவில் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?




ரெட்மி 15ஏ ஸ்மார்ட்போன் – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட் அப் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது 32 LED பிளாஷ் உடன் கூடிய மெகாபிக்சல் பிரைமரி கேமரா கொடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்பக்கத்தில் 8 மெகாபிசல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6,300 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 15 வாட்ஸ் வயர்டு சார்ஜிங், 7.5 வாட்ஸ் வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தாலே இரண்டு நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க : புது ஸ்மார்ட்போன் வாங்கியிருக்கிறீர்களா… முதலில் இந்த பாதுகாப்பு அம்சங்களை ஆன் செய்யுங்கள்
விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி 15 ஏ ஸ்மார்ட்போன் ரூ.12,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி 15 ஏ ஸ்மார்ட்போன் ரூ.14,499-க்கும், 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி 15 ஏ ஸ்மார்ட்போன் ரூ.16,499-க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 03, 2026 முதல் விற்பனைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.