புது ஸ்மார்ட்போன் வாங்கியிருக்கிறீர்களா… முதலில் இந்த பாதுகாப்பு அம்சங்களை ஆன் செய்யுங்கள்
New Smartphone Setup Guide : புது ஸ்மார்ட்போன் வாங்கும் பலரும் தங்கள் போன்களில் சில செட்டிங்குகளை மேற்கொள்ளாமல் சிக்கல்களை சந்திக்கிறார்கள். இதனை செய்வதன் மூலம் நமது ஸ்மார்ட்போன் திருடப்படாமலும், தகவல்கள் பாதுகாப்பாகவும் இருக்கும். இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
புது ஸ்மார்ட்போன் வாங்கியவுடன் பலரும் அதனை உடனடியாக பயன்படுத்த தொடங்க ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் புது ஸ்மார்ட்போன் வாங்கியவுடன் அதில் சில பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்ளாமல் இருப்பது பெரிய ஆபத்தாக மாறலாம். உங்கள் தனிப்பட்ட தகவல்கள் வங்கி விவரங்கள், ஓடிபி போன்ற விவரங்களுக்கு ஆபத்து ஏற்படலாம். இது குறித்து மத்திய அரசின் சைபர் பாதுகாப்பு அமைப்பு முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்கள் தங்கள் புதிய போனில் சில முக்கிய பாதுகாப்பு அமைப்புகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
நம் ஸ்மார்ட்போன்கள் நமது டிஜிட்டல் வங்கி போல செயல்படுகிறது. அதில் யுபிஐ செயலிகள், வங்கி தகவல்கள், ஓடிபி, சமூக வலைதள கணக்குகள், தனிப்பட்ட விவரங்கள் போன்ற அனைத்தும் உள்ளன. ஒருவரை பற்றி தெரிந்துகொள்ள அவரது ஸ்மார்ட்போனை தெரிந்துகொண்டால் போதும் னஎ்ற நிலை இருக்கிறது. எனவே ஸ்மார்ட்போன் பாதுகாப்பாக இல்லை என்றால் நம் தகவல்கள் அனைத்தும் திருடப்பட வாய்ப்புள்ளது. இது நமக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம். இந்த கட்டுரையில் ஸ்மார்ட்போன் வாங்கியவுடன் செய்ய வேண்டியது குறித்து பார்க்கலாம்.
Device Tracking அம்சத்தை முதலில் ஆன் செய்ய வேண்டும்
நமது ஸ்மார்ட்போன் காணாமல் போனால் அதனை கண்டுபிடிக்க டிவைஸ் டிராக்கிங் (Device Tracking) என்ற அம்சம் நமக்கு பெரிதும் உதவும். இதற்கு ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் Settings – Find My Device என்ற அம்சத்தை ஆன் செய்யவும். ஐபோன்களில் ஆப்பிள் வழங்கும் டிராக்கிங் வசதி இயல்பாகவே இருக்கும். இதன் மூலம் போனின் லொகேஷன் நம்மால் தெரிந்துகொள்ள முடியும், போனை லாக் செய்யலாம். ரிங் செய்யலாம். தேவையெனில் அதில் உள்ள முக்கியமான டேட்டாக்களை நீக்கலாம்.
இதையும் படிக்க : கிரியேட்டர்களுக்கு பெரிய வாய்ப்பு – ஏஐ பயிற்சிக்காக 15,000 இலவச ஸ்காலர்ஷிப் – மத்திய அரசு அறிவிப்பு
Remote Lock மற்றும் ஆஃப்லைன் டிராக்கிங் வசதி
போனை திருட முயற்சித்தால் உங்கள் போனை நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே அதனை லாக் செய்ய முடியும். மேலும் இண்டர்நெட் இல்லாவிட்டாலும் டிராக் செய்ய முடியும். உங்கள் போனை திருடியவர் அதனை ஸ்விட் ஆஃப் செய்ய முயன்றாலும் நெட்வொர்க்கை நீக்கினாலும் இந்த அம்சம் உங்களுக்கு உதவும்.
நோட்டிஃபிகேஷன் பிரைவசி பாதுகாப்பு அம்சம்
நாம் பெறும் ஓடிபி, வங்கியில் இருந்து வரும் நோட்டிஃபிகேஷன், தனிப்பட்ட தகவல்கள் போன்ற நம் லாக் ஸ்கிரீனில் தெரிந்தால் அது பெரிய ஆபத்தாக முடியும். இதனை தவிர்க்க உங்கள் போனில் Settings – Notification என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்கவும். அதில், Lock Screen Preview என்பதை ஆஃப் அல்லது ஹைட் செய்யவும். இதனால் உங்கள் போனை லாக் செய்திருந்தால் நோட்டிஃபிகேஷனை யாரும் பார்க்க முடியாது.
இதையும் படிக்க : 15 நிமிடங்களில் தானாகவே மறையும் குறுஞ்செய்திகள்.. புதிய அம்சத்தை சோதனை செய்யும் வாட்ஸ்அப்!
பவர் ஆஃப் செய்ய பாஸ்வேர்டு அமைக்கவும்
ரியல்மி, ஓப்போ, ஒன்பிளஸ் போன்ற போன்களில் பாஸ்வேர்டு அல்லது பின் இல்லாமல் ஸ்விட்ச் ஆஃப் செய்ய முடியாது. இதனால உங்கள் போனை யாராவது திருட முயன்றால் அவர்களால் உடனே உங்கள் போனை ஆஃப் செய்ய முடியாது. உங்களால் எளிதில் டிராக்கிங் செய்ய முடியும்.
சிம் லாக் என்ற அம்சத்தை ஆன் செய்யுங்கள்
இந்தியாவில் சிம் ஸ்வாப் மோசடி அதிகரித்து வருகிறது. இதனால் உங்கள் சிம்மை லாக் செய்வதன் மூலம் சிம் கார்டை வேறு போனில் பயன்படுத்த முடியாது. ஓடிபி மோசடியில் இருந்து பாதுகாக்க முடியும்.



