AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

‘ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்’ – ஃபேஸ்புக்கின் புதிய திட்டம்

Meta Creator Program : கிரியேட்டர்கள் தங்கள் கண்டென்ட்களை விரைவாக பணமாக்கவும், பயனர்களை எளிதில் சென்றடைவதை உறுதி செய்யவும் மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக்கில் கிரியேட்டர் ஃபாஸ்ட் டிராக் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் மூலம் மாதத்துக்கு லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் முறையையும் வழங்குகிறது.

‘ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்’ – ஃபேஸ்புக்கின் புதிய திட்டம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 20 Mar 2026 16:47 PM IST

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான ஃபேஸ்புக், கிரியேட்டர் ஃபாஸ்ட் டிராக் என்ற புதிய அம்சத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்தின் முக்கிய நோக்கம், கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு அதிக பணம் பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்குவதாகும். இந்தத் திட்டத்தின் கீழ், கிரியேட்டர்கள் பணம் பெறுவதை உறுதி செய்வதையும், கன்டென்ட் மக்களிடம் சென்றடைவதையும் உறுதி செய்யும் இது ஃபேஸ்புக் தளத்தில் அவர்களின் வளர்ச்சியை விரைவுபடுத்த உதவும். இந்த புதிய திட்டம்,  பொருளாதாரத்தில் ஃபேஸ்புக்கின் வளர்ந்து வரும் அர்ப்பணிப்பு மற்றும் முதலீட்டின் ஒரு முக்கிய பகுதியாகும்.

வருமானத்தை பெறுக்க ஃபேஸ்புக்கின் புதிய அம்சம்

இதுகுறித்து மெட்டா நிறுவனம் வெளியிட்ட பதிவில், மற்ற தளங்களில் ஃபாலோயர்களை உருவாக்கிய கிரியேட்டர்கள், ஃபேஸ்புக்கில் புதிதாகத் தொடங்குவது சவாலாக இருக்கலாம்.  எனவே, அவர்களின் தொடக்க செயல்முறையை எளிதாகவும் வேகமாகவும் மாற்றுவதற்காக, நாங்கள் கிரியேட்டர் ஃபாஸ்ட் டிராக் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம். என்று குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிக்க : கெஸ்ட் சாட்ஸ் அம்சத்தை அறிமுகம் செய்த வாட்ஸ்அப்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

மேலும், இந்த கிரியேட்டர் ஃபாஸ்ட் ட்ராக் என்ற அம்சம்  ஃபேஸ்புக்கிற்கு ஏற்கனவே பிரபலமான படைப்பாளிகள் ஃபேஸ்புக்கில் பிரபலமடைந்து வெற்றிபெறுவதை முன்னெப்போதையும் விட எளிதாக்குகிறது. இந்தத் திட்டத்தில் பதிவுசெய்யும் கிரியேட்டர்கள், தங்களின் தகுதியான ரீல்ஸ்களுக்கு அதிக ரீச் பெறுவார்கள்.  இது ஃபாலோயர்களின் வளர்ச்சியை விரைவுபடுத்தும். மேலும், ஃபேஸ்புக்கில் தகுதியான ரீல்ஸ்களைப் பகிர்வதற்கு ஈடாக மூன்று மாதங்களுக்கு உறுதியான கட்டணத்தையும் பெறுவார்கள்.

‘ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்’

இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் கிரியேட்டர்கள், இன்ஸ்டாகிராம், அல்லது யூடியூப் ஆகியவற்றில் குறைந்தபட்சம் 100,000 ஃபாலோயர்களைக் கொண்டிருந்தால், மாதத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.93,397 வரை சம்பாதிக்கலாம். மேலும், இந்தத் தளங்களில் குறைந்தபட்சம் ஒன்றிலாவது ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்டிருந்தால், அவர்கள் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ. 280,193 வரை சம்பாதிக்க முடியும். இந்தத் திட்டம், படைப்பாளிகளுக்கு ஃபேஸ்புக் கண்டென்ட்டிற்கான பணமாக பெறுவதை உடனடியாக மேற்கொள்ளவும் உதவுகிறது.

இதையும் படிக்க : இனி இன்ஸ்டாகிராமில் End-to-end Encryption அம்சம் இருக்காது.. கேள்விக்குறியாகும் பாதுகாப்பு?

இதன் மூலம், அவர்கள் கிரியேட்டர் ஃபாஸ்ட் ட்ராக் திட்டத்தை முடித்த பிறகும், தகுதியான கண்டென்ட்கள் மூலம் மேலும் சம்பாதிக்கவும், தொடர்ந்து வருவாய் ஈட்டவும் முடியும் என மெட்டா அறிவித்துள்ளது. கிரியேட்டர்கள் தங்கள் படைப்புகளிலிருந்து பணம் சம்பாதிக்க உதவுவதற்காக, குறிப்பாக அவர்களின் மக்களுக்கு பயனுள்ள அல்லது விருப்பமான கண்டென்ட்களை உருவாக்குவதன் மூலம், ஃபேஸ்புக் இன்னும் அதிகமாக முதலீடு செய்கிறது.

கடந்த 2025 ஆம் ஆண்டில், ஃபேஸ்புக் தனது கண்டென்ட் கிரியேட்டர்களுக்கு சுமார் 3 பில்லியன் டாலரை வழங்கியது.  இது அதற்கு முந்தைய 2024 ஆம் ஆண்டை  விட 35 சதவிகிதம் அதிகமாகும்.  இன்றுவரை வழங்கப்பட்ட மிக அதிக வருடாந்திரத் தொகையாகவும் அமைகிறது.

Follow Us