போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்!
Poco X8 Pro Series Smartphones Introduced In India | போக்கோ நிறுவனம் தனது போக்கோ எக்ஸ்8 ப்ரோ மற்றும் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அவற்றின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனமான போக்கோ (Poco) தனது போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரீஸ் (Poco X8 Pro Series) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சீரீஸில் போக்கோ எக்ஸ்8 ப்ரோ (Poco X8 Pro) மற்றும் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் (Poco X8 Pro Max) ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், போக்கோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரீஸ் இந்தியாவில் அறிமுகம்
போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.83 இன்ச் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 9,000 mAh பேட்டரி அம்சத்தை கொண்டுள்ள நிலையில், 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் LPDDR5X 12ஜிபி ரேம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், UFS 512 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வெறும் ரூ.12,999.. அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான லாவா போல்டு 2 ஸ்மார்ட்போன்!
போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரீஸ் – சிறப்பு அம்சங்கள்
✨Open for sales! Grab your POCO X8 Pro or POCO X8 Pro Max now — leading performance, stunning display, and all-round power, ready to go! pic.twitter.com/UFhZfuKLGZ
— POCO (@POCOGlobal) March 17, 2026
போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 8500 அல்ட்ரா பிராசசர் அம்சம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 6,500 mAh பேட்டரி மற்றும் 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜை கொண்டுள்ளது.
இதையும் படிங்க : AI ஆதிக்கம்.. மெட்டா நிறுவனம் 20% ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டம்.. அதிர்ச்சி தகவல்!
போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரீஸ் – விலை பட்டியல்
12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.42,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல 12ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.46,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேக் கொண்ட போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.32,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.35,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.