AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வெறும் ரூ.12,999.. அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான லாவா போல்டு 2 ஸ்மார்ட்போன்!

Lava Bold 2 Smartphones Introduced In India | லாவா நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது லாவா 2 போல்டு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

வெறும் ரூ.12,999.. அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான லாவா போல்டு 2 ஸ்மார்ட்போன்!
லாவா போல்டு 2 ஸ்மார்ட்போன்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 Mar 2026 14:15 PM IST

இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் (Smartphone) நிறுவனமாக லாவா (Lava) உள்ளது. இந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது லாவா போல்டு 2 ஸ்மார்ட்போனை (Lava Bold 2 Smartphone) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் அறிமுகமான லாவா போல்டு 2 ஸ்மார்ட்போன்

லாவா நிறுவனம் 2025, ஏப்ரல் மாதத்தில் லாவா போல்டு ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து தற்போது லாவா போல்டு 2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் கேமரா, 5,000 mAh பேட்டரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஸ்மார்ட்போன் மார்ச் 19, 2026 முதல் விற்பனைக்கு வர உள்ளது.

இதையும் படிங்க : இனி ஹேக்கர்கள் கவலை இல்லை…. வந்தாச்சு வாட்ஸ்அப்பில் புதிய வசதி

லாவா போல்டு 2ஜி ஸ்மார்ட்போன் – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த லாவா போல்டு 2ஜி ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பயோமெட்ரிக் பாதுகாப்புடன் (Biometric Security) கூடிய இன் டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் (In Display Fingerprint) அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. புகைப்படங்களுக்காக இந்த ஸ்மார்ட்போனில் சோனி சென்சார் உடன் கூடிய 50 மெகாபிக்சல் ரியர் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு… இந்தியாவில் இணைய சேவை பாதிக்கும் அபாயம்

இந்த லாவா போல்டு 2 ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 பிராசசர் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5,000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி LPDDR5 ரேம் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒரே ஒரு வேரியண்டில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ.12,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us