AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

15 நிமிடங்களில் தானாகவே மறையும் குறுஞ்செய்திகள்.. புதிய அம்சத்தை சோதனை செய்யும் வாட்ஸ்அப்!

New Disappearing Feature Testing In WhatsApp | வாட்ஸ்அப் செயலியில் புதிய புதிய அட்டகாசமான அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், குறுஞ்செய்திகள் தானாகவே மறையக்கூடிய அம்சம் ஒன்றை வாட்ஸ்அப் சோதனை செய்து வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

15 நிமிடங்களில் தானாகவே மறையும் குறுஞ்செய்திகள்.. புதிய அம்சத்தை சோதனை செய்யும் வாட்ஸ்அப்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 24 Mar 2026 16:46 PM IST

உலக அளவில் மிக முக்கிய தகவல் பரிமாற்ற செயலியாக மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளது. உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் இந்த செயலியை பயன்படுத்தும் நிலையில், மெட்டா தொடர்ந்து பல்வேறு புதிய புதிய அப்டேட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது மேலும் ஒரு அசத்தலான அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அது என்ன அம்சம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்யும் மெட்டா

வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா, அதில் பல அட்டகாசமான அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. ஏற்கனவே வாட்ஸ்அப் செயலியில், தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறும் அட்டகாசமான அம்சங்கள் உள்ளன. அவற்றை மேலும் சிறப்பானவையாக மாற்றும் வகையில், மெட்டா பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது குறுஞ்செய்திகள் 15 நிமிடங்களில் தானாகவே மறையக்கூடிய அசத்தல் அம்சம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.

இதையும் படிங்க : இன்ஸ்டாகிராம் மெசேஜில் 8 விதமான குரலில் பேசலாம் – வந்தாச்சு புது அப்டேட்

15 நிமிடங்களில் தானாகவே மறையும் செய்திகள்

வாட்ஸ்அப்பின் இந்த புதிய அம்சத்தில் குறுஞ்செய்தியை பெறும் நபர், அதனை படித்ததும் குறுஞ்செய்தி தானாகவே மறைந்திவிடும். அதாவது, குறுஞ்செய்தியை பெறும் நபர் அந்த குறுஞ்செய்தியை படித்து முடித்த 15 நிமிடங்களுக்கு பிறகு அந்த குறுஞ்செய்தி அனுப்பியவர் மற்றும் பெற்றவர் ஆகிய இருவரின் சாட்களில் இருந்து மாயமாகிவிடும். ஒருவேளை குறுஞ்செய்தியை பெற்ற நபர் அதனை படிக்கவே இல்லை என்றால் 24 மணி நேரத்திற்கு அந்த குறுஞ்செய்தி அப்படியே இருக்கும். இந்த அம்சம் பீட்டா ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.26.12.2-ல் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : தேர்தல் நடத்தை விதிகள்: வாட்ஸ்அப் குழுக்களுக்கு கட்டுப்பாடு – மீறினால் சட்ட நடவடிக்கை

இந்த அம்சம் தற்போது சோதனையில் உள்ள நிலையில், சோதனை முடிந்தபிறகு விரைவில் அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் பயன்பாட்டு வரும் என கூறப்பட்டுள்ளது. முக்கியமான மற்றும் ரகசிய தகவல்களை வாட்ஸ்அப்பில் பாதுகாப்பாக பகிர இது ஒரு சிறந்த அம்சமாக இருக்கும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow Us