IND vs ZIM: 3வது டி20யிலும் மாற்றங்கள் இருக்குமா..? உடைத்து பேசிய ஷ்ரேயாஸ் ஐயர்!
IND vs ZIM 3rd T20: இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று அதாவது 2026 ஜூலை 26ம் தேதி ஹராரேவில் நடைபெற உள்ளது. மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி என்ன மாற்றங்களைச் செய்யக்கூடும் என்று 2வது போட்டியின் வென்ற பிறகு, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேட்கப்பட்டது.
தொடர்ந்து நேற்று அதாவது 2026 ஜூலை 25ம் தேதி நடந்த இரண்டாவது டி20 போட்டியிலும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா, ஜிம்பாப்வேயை (IND vs ZIM) வீழ்த்தியது. ஹராரேயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி (Indian Cricket Team) 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்கான ஆடும் லெவனில் இந்திய அணி ஒரே ஒரு மாற்றத்தை மட்டுமே செய்திருந்தது. வேகப்பந்து வீச்சாளர் அசோக் சர்மாவுக்குப் பதிலாக யாஷ் தாக்கூருக்கு அறிமுகமாகும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்ட யாஷ், தனது முதல் டி20 போட்டியிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
ALSO READ: ஒரே ஓவரில் அதிரடியும்.. அவுட்டும்.. இணையத்தில் தெறிக்கும் சூர்யவன்ஷி வீடியோ!
3வது டி20 போட்டி எப்போது..?
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று அதாவது 2026 ஜூலை 26ம் தேதி ஹராரேவில் நடைபெற உள்ளது. மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி என்ன மாற்றங்களைச் செய்யக்கூடும் என்று 2வது போட்டியின் வென்ற பிறகு, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு காரணம், இந்தியா ஏற்கனவே தொடரை வென்றுவிட்டதால், கடைசி போட்டியில் பல மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது.




இந்திய அணி எத்தனை மாற்றங்களைச் செய்யும்?
இரண்டாவது டி20 போட்டிக்குப் பிறகு, கடைசி போட்டியில் இந்திய அணி என்ன மாற்றங்களைச் செய்யக்கூடும் என்று கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷ்ரேயாஸ் ஐயர், “நாங்கள் இன்னும் அது குறித்து முடிவு செய்யவில்லை. பயிற்சியாளரிடமும் இதுபற்றிப் பேசவில்லை. துரதிர்ஷ்டவசமாக, பிரின்ஸ் யாதவ் காயமடைந்துள்ளார். எனவே, அணியில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது,” என்று கூறினார்.
பிரின்ஸ் யாதவிற்கு என்ன ஆனது..?
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவுக்கு தொடை தசைநார் காயம் ஏற்பட்டது. இதன் விளைவாக, அவரால் 1.2 ஓவர்கள் மட்டுமே பந்து வீச முடிந்தது. இருப்பினும், இந்த போட்டியில் பிரின்ஸ் யாதவ் வெறும் 8 பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிரின்ஸ் குணமடையவில்லை என்றால், இந்தத் தொடரின் முதல் டி20 போட்டியில் சர்வதேச அளவில் அறிமுகமான அசோக் சர்மா, ஆடும் லெவனுக்குத் திரும்ப வாய்ப்புள்ளது.
ALSO READ: 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி – தொடரைக் கைப்பற்றி அசத்தல்
இரண்டாவது டி20 போட்டியில், திலக் வர்மா (60) மற்றும் இஷான் கிஷன் (81) ஆகியோரின் அரைசதங்களின் உதவியால் இந்தியா 219 ரன்கள் எடுத்தது. பின்னர் இந்தியாவின் அசத்தல் பந்துவீச்சால், ஜிம்பாப்வேயை வெறும் 129 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. இதன்மூலம், இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.