Ind vs Zim : 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி – தொடரைக் கைப்பற்றி அசத்தல்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் தொடர்ச்சியாக 2 போட்டிகளில் வெற்றி பெற்று ஜிம்பாப்வேவுக்கு எதிராக தொடரையும் கைப்பற்றியது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக தொடரை இழந்த நிலையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணியின் வெற்றி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் தொடர்ச்சியாக 2 போட்டிகளில் வெற்றி பெற்று ஜிம்பாப்வேவுக்கு எதிராக தொடரையும் கைப்பற்றியது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக தொடரை இழந்த நிலையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணியின் வெற்றி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், இன்னும் ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையிலேயே இந்திய அணி டி20 தொடரைக் கைப்பற்றியது. இந்திய அணி நிர்ணயித்த 220 ரன்கள் என்ற இலக்கை எதிர்கொண்ட ஜிம்பாப்வே அணி, 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையும் படிக்க : IPL 2027: சிஎஸ்கே அதிரடி வீரரை குறிவைத்த எல்எஸ்ஜி.. பரிமாற்றமாக இந்த அனுபவ வேகப்பந்து வீச்சாளரா?




இந்தியத் தரப்பில் அபிஷேக் சர்மா 3 விக்கெட்டுகளையும் யாஷ் தாக்கூர், பிரின்ஸ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மேலும், ரவி பிஷ்னோய், சிவம் துபே, திலக் வர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். குறிப்பாக பிரையன் பென்னட்டை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் யாஷ் தாக்கூர் தனது முதல் சர்வதேச டி20 விக்கெட்டை கைப்பற்றினார்.
ஹராரேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 44 பந்துகளில் 81 ரன்கள் குவித்து விமர்சனங்களுக்கு பதிலளித்தார். மேலும் திலக் வர்மா 29 பந்துகளில் 60 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையும் படிக்க : Team India: பும்ரா- ஷ்ரேயாஸ் இல்லாமல் இந்திய அணி விளையாடுமா? இந்த ஒருநாள் தொடரில் மிஸ்!
இந்த போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்சர் ஆகியவை அடங்கும். இதனையடுத்து 3வது விக்கெட்டுக்கு இஷான் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி 66 ரன்களை குவித்தது. அதனைத் தொடர்ந்து நான்காவது விக்கெட்டுக்கு இஷான் மற்றும் திலக் ஜோடி 94 ரன்களையும் சேர்த்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2- 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த வெற்றியின் மூலம் அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக தொடர் தோல்வியை சந்தித்த இந்திய அணி முதல் டி20 தொடர் வெற்றியைப் பதிவு செய்ததது. இதன் மூலம் கேப்டனாக தான் சந்தித்த விமர்சனங்களுக்கு பதிலளித்தார் ஸ்ரேயாஸ் ஐயர் என்பது குறிப்பிடத்தக்கது.