AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“3 நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்க உள்ளேன்” – உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம்

MK Stalin Shares Health Update : திமுக முப்பெரும் விழா மு.க.ஸ்டாலினின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ஒத்தி வைக்கப்பட்டது. அவருக்கு வைரல் காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.  இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் தனது உடல்நிலை குறித்து விளக்கமளித்தார்.

“3 நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்க உள்ளேன்”  – உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம்
மு.க.ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Published: 16 Sep 2026 10:07 AM IST

சென்னை, செப்டம்பர் 16 :  செப்டம்பர் 15, 2026 நேற்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா மு.க.ஸ்டாலினின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ஒத்தி வைக்கப்பட்டது. அவருக்கு வைரல் காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.  இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலைத் தொடர்ந்து. மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறேன். தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், கலையுலக நண்பர்கள் எனது அலுவலகத்தைத் தொடர்புகொண்டு எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்துள்ளனர்.

உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம்

கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி. பிற கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் காட்டிய அன்பிற்கும் அக்கறைக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ருத்துவர்களின் அறிவுரைப்படி, இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்க உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலினின் எக்ஸ் பதிவு

 

Follow Us