AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்.. எடப்பாடி வெளியிட்ட அறிவிப்பு.. யார்.. யார்.. இடம்பெற்றுள்ளனர்!

AIADMK Election In Charges Appointed : தமிழகத்தில் நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக அதிமுக சார்பில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார் .

அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்.. எடப்பாடி வெளியிட்ட அறிவிப்பு.. யார்.. யார்.. இடம்பெற்றுள்ளனர்!
எடப்பாடி கே. பழனிசாமி
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 16 Sep 2026 06:25 AM IST

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதிக்கு கணிதா சம்பத், தாராபுரம் தொகுதிக்கு பானுமதி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வெற்றிக்கு ஆதரவாக தேர்தல் பணி செய்வதற்காக தேர்தல் பணி குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில்,

மேலும் படிக்க: மதுராந்தகம் – தாராபுரம் இடைத்தேர்தல்.. போட்டி போட்டு வேட்புமனு தாக்கல் செய்த தவெக, திமுக வேட்பாளர்கள்!

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:

  • செங்கல்பட்டு கிழக்கு.
  • செங்கல்பட்டு மேற்கு.
  • வடசென்னை வடக்கு ( கிழக்கு).
  • வடசென்னை வடக்கு ( மேற்கு).
  • வட சென்னை தெற்கு ( கிழக்கு).
  • வடசென்னை தெற்கு ( மேற்கு).
  • தென் சென்னை வடக்கு ( கிழக்கு).
  • தென் சென்னை வடக்கு ( மேற்கு).
  • தென் சென்னை தெற்கு ( கிழக்கு).
  • தென் சென்னை மேற்கு ( மேற்கு).

திருவண்ணாமலை- கடலூர் மாவட்டம்

  • திருவண்ணாமலை தெற்கு.
  • திருவண்ணாமலை வடக்கு.
  • திருவண்ணாமலை மத்தியம்.
  • திருவண்ணாமலை கிழக்கு.
  • கடலூர் தெற்கு.
  • கடலூர் கிழக்கு.
  • கடலூர் வடக்கு.
  • கிருஷ்ணகிரி கிழக்கு.
  • கிருஷ்ணகிரி மேற்கு.

தருமபுரி-  திருவள்ளூர் மாவட்டங்கள்

  • தருமபுரி மேற்கு.
  • தருமபுரி கிழக்கு.
  • அரியலூர்.
  • நாகப்பட்டினம்.
  • பெரம்பலூர்.
  • சென்னை புறநகர்.
  • திருவள்ளூர் மேற்கு.
  • திருவள்ளூர் தெற்கு.
  • திருவள்ளூர் கிழக்கு.
  • திருவள்ளூர் வடக்கு.
  • திருவள்ளூர் மத்தியம்.
  • காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள்.

தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட மாவட்டங்கள்:

  • திருப்பூர் மாநகர்.
  • திருப்பூர் புறநகர் மேற்கு.
  • திருப்பூர் புறநகர் கிழக்கு.
  • சேலம் புறநகர்.
  • சேலம் மாநகர்.
  • ஈரோடு புறநகர் கிழக்கு.
  • ஈரோடு மாநகர்.
  • நாமக்கல்.
  • ஈரோடு புறநகர் மேற்கு.
  • கோவை புறநகர் வடக்கு.
  • கோவை மாநகர்.
  • கோவை புறநகர் தெற்கு.
  • கோவை புறநகர் மத்தியம்.

திருச்சி- புதுக்கோட்டை மாவட்டம்

  • நீலகிரி.
  • திருச்சி புறநகர் கிழக்கு.
  • திருச்சி புறநகர் வடக்கு.
  • திருச்சி புறநகர் தெற்கு.
  • திருவாரூர். கரூர்.
  • புதுக்கோட்டை தெற்கு.
  • புதுக்கோட்டை வடக்கு.
  • திண்டுக்கல் மேற்கு.
  • திண்டுக்கல் கிழக்கு ஆகிய மாவட்டங்கள்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த தலைமை நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர், மக்களவை, மாநிலங்களவை, எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் தேர்தல் பணியாற்றுவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 2 தொகுதி இடைத்தேர்தல்… தனித்து களமிறங்கும் இடதுசாரிகள்.. வேட்பாளர்கள் அறிவிப்பு!

Follow Us