AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முதல்வர் விஜய் துறையில் பெரும் முறைகேடு.. அமைச்சருக்கு தொடர்பு.. ஆதாரத்துடன் ஆப்படித்த அறப்போர் இயக்கம்!

Municipal Administration Department Tender Irregularity : முதல் அமைச்சர் ஜோசப் விஜய் வசம் உள்ள நகராட்சி நிர்வாக துறையி ல் ரூ. 45. 90 லட்சம் டெண்டர் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக அறப்போர் இயக்கம் ஆதாரத்துடன் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது .

முதல்வர் விஜய் துறையில் பெரும் முறைகேடு.. அமைச்சருக்கு தொடர்பு.. ஆதாரத்துடன் ஆப்படித்த அறப்போர் இயக்கம்!
முதல்வர் விஜய் துறையில் டெண்டர் முறைகேடு.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 15 Sep 2026 18:17 PM IST

தமிழகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் வசம் உள்ள துறைகளில் நகராட்சி நிர்வாக துறையில் ரூ. 45 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான டெண்டர்களில் மிகப்பெரிய கூட்டு சதி மற்றும் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி உள்ளது. இதில், தாம்பரம் மாநகராட்சியில் வெளியிடப்பட்ட டெண்டர்களில் பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்ட நிலையில், தங்களுக்கு சாதகமான ஒப்பந்ததாரர்களுக்கு பணத்தை ஒதுக்கீடு செய்வதற்காக மாநகராட்சி ஆணையர் பாலசந்தர் ஐஏஎஸ் மற்றும் மனிதவளத்துறை அமைச்சர் சரத்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் முறைகேடாக டெண்டர் நிர்ணயம் செய்து கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளனர் என்று அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன், தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் ஊழலை ஒழிப்போம் என்று கூறும் முதல்வர் விஜய், தனது சொந்த துறையில் நடந்த முறைகேடு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

பெருங்களத்தூர் ரவுண்டானா பணியில் முறைகேடு

அத்துடன், குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், டெண்டர் முறைகேடு தொடர்பாக தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குனர், லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியோருக்கு ஆதாரங்களுடன் இந்த புகார் தொடர்பான மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதே போல, பெருங்களத்தூர் பாலம் ரவுண்டானா பணி மற்றும் சிட்லபாக்கம் ரவுண்டானா பணி ஆகிய ஒப்பந்தங்களிலும் முறைகேடு நிகழ்ந்துள்ளது.

மேலும் படிக்க: மதுராந்தகம் – தாராபுரம் இடைத்தேர்தல்.. போட்டி போட்டு வேட்புமனு தாக்கல் செய்த தவெக, திமுக வேட்பாளர்கள்!

ரூ.18.60 லட்சம் டெண்டரில் முறைகேடு

பெருங்களத்தூர் பாலப்பணிக்காக கடந்த ஆகஸ்ட் 6- ஆம் தேதி இணையத்தில் டெண்டர் வெளியிடப்பட்டது. ஆனால் ஜூலை 29- ஆம் தேதியே அமைச்சர் சரத்குமார் அசோக தூணை திறந்து வைத்திருந்தார். இது தொடர்பான திறப்பு விழா வீடியோக்களை தனது சமூக வலைதளங்களில் அமைச்சர் சரத்குமார் பகிர்ந்திருந்தார். இது மட்டுமின்றி, சிட்லபாக்கம் ரவுண்டானாவில் தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு சிலை அமைப்பது, அழகு படுத்தும் பணிகளுக்காக ரூ.18,60,000- க்கு கடந்த ஆகஸ்ட் 6- ஆம் தேதி டெண்டர் வெளியிடப்பட்டிருந்தது.

565 டெண்டர்களில் 309 டெண்டர்கள் நிறுத்தம்

ஆனால், தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு சிலை ஆகஸ்ட் 10- ஆம் தேதியே திறக்கப்பட்டு, அதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருந்தன. இந்த விவகாரம் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் இடையே சட்ட விரோத கூட்டணியை உறுதி செய்வதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டியுள்ளது. அத்துடன், தாம்பரம் மாநகராட்சியில் 565 டெண்டர்களில் 309 டெண்டர்கள் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 2 தொகுதி இடைத்தேர்தல்… தனித்து களமிறங்கும் இடதுசாரிகள்.. வேட்பாளர்கள் அறிவிப்பு!

Follow Us