டிரைவிங் லைசென்ஸ், வாகனப் பதிவு டிஜிட்டல் மயம்: ஒரிஜினல் பெற என்ன செய்ய வேண்டும்?
Help Centres for Vehicle Documents : டிரைவிங் லைசென்ஸ், வாகனப் பதிவுச் சான்றிதழ் வழங்குவது டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள நிலையில், அசல் ஆவணங்களின் அச்சு பிரதி தேவைப்படுவோர் தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துத் துறை அலுவலகங்களில் உதவி மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, செப்டம்பர் 16 : டிரைவிங் லைசென்ஸ், வாகனப் பதிவுச் சான்றிதழ் வழங்குவது டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள நிலையில், அசல் ஆவணங்களின் அச்சு பிரதி தேவைப்படுவோர் தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துத் துறை அலுவலகங்களில் உதவி மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டிரைவிங் லைசென்ஸ், வாகனப் பதிவு டிஜிட்டல் மயம்
தமிழகத்தில் புதிய லைசென்ஸ் பெறுவதிலும், வாகனப் பதிவு எண் பெறுவதிலும் தாமதம் ஏற்படுவது வழக்கமாகி இருந்தது. இந்த நிலையில் இந்த சிக்கலை தவிர்க்கும் வகையில் தமிழக அரசு புதிய டிஜிட்டல் நடைமுறையை கொண்டு வந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 2, 2026 அன்று விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜோசப் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தைத் தடுக்கும் வகையில் டிஜிட்டல் முறையில் ஆவணங்களை வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டது. அந்த புதிய நடைமுறை செப்டம்பர் 15, 2026 முதல் அமலுக்கு வருகிறது.
இதையும் படிக்க : ஜனநாயகன் படத்தில் நடித்தால் மட்டும் போதாது.. சீமான் சொன்ன அடுத்த வார்த்தை.. விஜய் சேதுபதி விவகாரத்தில் விமர்சனம்!




இதனையடுத்து டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகனப் பதிவு அசல் அச்சுப் பிரதி பெற முடியாதா என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் போக்குவரத்துத் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15, 2026 அன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழை அச்சு வடிவத்துக்கு பதிலாக டிஜிட்டல் வடிவில் வழங்கும் நடைமுறை செயல்படுத்தப்படுகிறது.
டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் மற்றும் டிஜிட்டல் வாகனப் பதிவுச் சான்றிதழை முறையே சாரதி (SARATHI) மற்றும் வாஹன் (VAHAN) இணையதளங்கள் மூலமாகவும், டிஜிலாக்கர் (DigiLocker) மற்றும் எம்பரிவாஹன் (mParivahan) கைப்பேசி செயலிகள் மூலமாகவும் பொதுமக்கள் எளிதாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இந்த நடைமுறையை பொதுமக்கள் எளிதாக தெரிந்து கொள்ள தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் துறை அலுவலகங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவ்விடத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் வழிமுறைகள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
ஒரிஜினல் பெற என்ன செய்ய வேண்டும்?
இந்தப் பதாகையில் சாரதி இணையதளம் மூலம் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்தை (DL) பதிவிறக்கம் செய்வது, ஓட்டுநர் உரிமத்தில் கைபேசி எண்ணை அப்டேட் செய்வது, ஓட்டுநர் உரிமம் தொடர்பான விண்ணப்ப எண்ணைக் கண்டறிவது, வாஹன் இணையதளம் மூலம் டிஜிட்டல் பதிவுச் சான்றிதழை பதிவிறக் கம் செய்வது, வாகன உரிமையாளரின் கைபேசி எண்ணை அப்டேட் செய்வது, டிஜி லாக்கர் மற்றும் எம்பரிவாஹன் கைபேசி செயலி மூலம் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்றிதழை பதிவிறக்கம் அல்லது அணுகுவது தொடர்பாக வழிமுறைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க : சென்னைக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட 25,000 போதை மாத்திரைகள்.. 4 பேர் கைது..
மேற்கண்ட வழிமுறைகளை காணொளிகளாக போக்குவரத்து துறையின் அதி காரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் காணலாம். பொதுமக்களுக்கு டிஜிட்டல் ஆவணங் களின் அச்சுப் பிரதி தேவைப்பட்டால், தமிழகம் முழுவதும் உள்ள எந்தவொரு இ-சேவை மையத்திலும் கைபேசி எண்ணுக்கு பெறப்பட்ட குறுஞ்செய்தியை காண்பித் து, ஒரு ஆவணத்துக்கு ரூ.60 என்ற நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி வண்ண அச்சுப் பிரதியைப் பெற்றுக்கொள்ளலாம்.