AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்த காத்திருந்த அமைச்சர் மரிய வில்சன்.. பூங்கா பூட்டப்பட்டிருந்ததால் அதிருப்தி..

செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணாவின் பிறந்தநாளை ஒட்டி, கொடைக்கானல் அண்ணா பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக அமைச்சர் சென்றிருந்தார். ஆனால், பூங்கா பூட்டப்பட்டிருந்ததால் அவர் நீண்ட நேரம் வாசலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்த காத்திருந்த அமைச்சர் மரிய வில்சன்.. பூங்கா பூட்டப்பட்டிருந்ததால் அதிருப்தி..
அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்த காத்திருந்த அமைச்சர் மரிய வில்சன்.
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 15 Sep 2026 19:01 PM IST

செப்டம்பர் 15, 2026: அண்ணா பிறந்தநாளை ஒட்டி, கொடைக்கானலில் அமைச்சர் மரியவள்சன் அண்ணா பூங்காவில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருந்த நிலையில், அண்ணா பூங்கா பூட்டிக் கிடந்ததால் நீண்ட நேரம் பூங்கா வாசலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை ஒட்டி, தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு இடங்களில் உள்ள அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழக அரசு சார்பிலும் சென்னையில் உள்ள அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

கொடைக்கானலில் ஆய்வு மேற்கொண்ட நிதியமைச்சர் மரிய வில்சன்:

இதனிடையே, தமிழ்நாடு நிதியமைச்சர் மரியவள்சன் கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு பூம்பாறை வனச்சரகம், வேம்படி சிகரப் பகுதியில் அவர் அதிரடி கள ஆய்வு மேற்கொண்டார். வனவிலங்குகளைப் பாதுகாக்கவும், சட்டவிரோத வேட்டையாடுதலைத் தடுக்கவும் அமைக்கப்பட்டு வரும் வேட்டைத் தடுப்பு முகாம் மற்றும் கண்காணிப்புக் கோபுரம் பணிகளை நேரில் பார்வையிட்டு, பணிகளின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

பூட்டப்பட்ட பூங்கா – வாசலில் காத்திருந்த அமைச்சர்:

இந்த நிலையில், செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணாவின் பிறந்தநாளை ஒட்டி, கொடைக்கானல் அண்ணா பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக அமைச்சர் சென்றிருந்தார். ஆனால், பூங்கா பூட்டப்பட்டிருந்ததால் அவர் நீண்ட நேரம் வாசலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் அதிருப்தியடைந்த அமைச்சர் மரியவள்சன், நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை முறையாக செய்யாதது தொடர்பாக உள்ளூர் நிர்வாகிகளைக் கடிந்து கொண்டார். மேலும், ஊழியர் ஒருவர் பூட்டை உடைக்க முயன்றபோது, “பூட்டை உடைக்க வேண்டாம். நான் மதுரை அல்லது திண்டுக்கல்லில் மாலை அணிவித்துக் கொள்கிறேன்” என அமைச்சர் தெரிவித்தார். ஆனால், சில நிமிடங்களிலேயே பூங்காவின் பூட்டு திறக்கப்பட்டது. பின்னர் அண்ணா சிலைக்கு அமைச்சர் மரியவள்சன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் படிக்க: முதல்வர் விஜய் லண்டன் பயணம்: தமிழ்நாட்டில் ரூ.15,300 கோடிக்கும் மேல் முதலீடு; 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு

விரைவில் ரோப் கார் திட்டம் கொடைக்கானலில் கொண்டுவரப்படும்:

அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க அமைச்சர் மரியவள்சன் நீண்ட நேரம் காத்திருந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் மரியவள்சன், கொடைக்கானலில் சாலை வசதி மிகவும் மோசமாக இருப்பதாகவும், பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். கொடைக்கானல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யிடம் தனியாக தெரிவிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: அன்புமணி, டிடிவி தினகரன் ஆதரவு கிடைக்குமா? எடப்பாடி பழனிசாமி தலைமையில் முக்கிய ஆலோசனை..

மேலும், கொடைக்கானலில் கனரக வாகனங்கள் இயக்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் ரோப் கார் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

Follow Us