AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Team India: ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்பு ரோஹித் நீக்கமா? ஓய்வா? பிசிசிஐ விளக்கம்!

Rohit Sharma Retirement Rumors: ரோஹித் சர்மா ஒருநாள் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து பரிசீலித்து வருவதாக பரவி வரும் வதந்திகளை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா திட்டவட்டமாக மறுத்துள்ளார். லண்டனில் இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, இதுவே ரோஹித்தின் தேசிய அணிக்கான கடைசி ஆட்டமாக இருக்கலாம் என்ற யூகங்கள் உச்சத்தை எட்டின.

Team India: ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்பு ரோஹித் நீக்கமா? ஓய்வா? பிசிசிஐ விளக்கம்!
ராஜீவ் சுக்லா - ரோஹித் சர்மா
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Jul 2026 18:42 PM IST

இந்திய அணியின் (Indian Cricket Team) ஜாம்பவான் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா (Rohit Sharma) சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்று, ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இந்தநிலையில், ரோஹித் சர்மா ஒருநாள் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து பரிசீலித்து வருவதாக பரவி வரும் வதந்திகளை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா திட்டவட்டமாக மறுத்துள்ளார். லண்டனில் இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, இதுவே ரோஹித்தின் தேசிய அணிக்கான கடைசி ஆட்டமாக இருக்கலாம் என்ற யூகங்கள் உச்சத்தை எட்டின. இதற்குப் பதிலளித்த ரோஹித் சர்மா, 110 பந்துகளில் அபாரமாக 138 ரன்கள் குவித்து, லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் ஆனார்.

ALSO READ: 2வது டி20யில் உலக சாதனை படைப்பாரா ஷ்ரேயாஸ்..? என்ன சாதனை அது..?

பிசிசிஐ கூறியது என்ன..?

ரோஹித் சர்மா ஓய்வு வதந்தி குறித்து ஆக்ராவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, “ரோஹித் சர்மா எங்கள் அணியில் ஓர் அங்கம். அவர் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரப்பப்படும் விஷயங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை. தற்போதைக்கு, அவர் ஓய்வு பெறுவது என்ற கேள்விக்கே இடமில்லை.

ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்தைத் தெரிவிக்க உரிமை உண்டு, ஆனால் அணியில் யார் நீடிப்பது, யார் நீக்கப்படுவது என்ற முடிவு தேர்வாளர்களிடமே உள்ளது. இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறது, எனவே தற்போதைக்கு எந்த மாற்றங்களும் தேவையில்லை” என்று கூறினார்.

ALSO READ: என் வாழ்க்கையை மாற்றிய ரோஹித் சர்மா வார்த்தைகள்.. மனம் திறந்த சஞ்சு சாம்சன்..!

ஓய்வு வதந்திக்கு ரோஹித்தின் பதில்:

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் சதமடித்த பிறகு பேசிய ரோஹித் சர்மா, “என் வேலை பேட்டிங் செய்வதுதான். வந்து விளையாடி, என் நாட்டிற்காக விளையாடுவது. நான் அறிமுகமானதிலிருந்தே இதைத்தான் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். அதைத்தான் நான் செய்யப் போகிறேன்,” என்று ஷர்மா திட்டவட்டமாகக் கூறினார். “நான் அறிமுகமானதிலிருந்தே இந்த ஆரவாரம் இருந்து வருகிறது. நான் இருக்கும் வரை, இந்த ஆரவாரம் இருந்துகொண்டே இருக்கும். அது எனக்கு ஒரு பொருட்டல்ல. களத்தில் நான் என்ன செய்கிறேன் என்பதுதான் முக்கியம். அணியின் வெற்றிக்கு என்னால் முடிந்த பங்களிப்பைச் செய்ய விரும்புகிறேன். என் கவனம் முழுவதும் அதில்தான் உள்ளது.” என்றார்.

Follow Us