வீட்டில் இந்த பிரச்னை இருக்கா? உங்கள் WiFi Router மாற்ற வேண்டிய நேரம் இதுதான்
Slow WiFi At Home Signs: பலர் இண்டர்நெட் வேகம் குறையும்போதோ அல்லது அடிக்கடி தடங்கல்கள் ஏற்படும்போதோ வேறு பிளானுக்கு மாறுவார்கள். ஒரு சிலர் நெட்வொர்க்கை மாற்றுவார்கள். உண்மையில் இது வைஃபை ரவுட்டரால் ஏற்படும் பிரச்னையாக இருக்கலாம். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உங்கள் வீட்டில் ஹை ஸ்பீட் பிராட்பேண்ட் இருந்தாலும், இண்டர்நெட் வேகம் குறைவாக இருக்கிறதா? பலரும் இதற்கு காரணம் இண்டர்நெட் கனெக்ஷன் தான் காரணம் என நினைப்பார்கள். ஆனால் உணமையில் உங்கள் வைஃபை ரவுட்டரில் பிரச்னை இருக்க வாய்ப்பிருக்கிறது. மற்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை போலவே வைஃபை ரவுட்டர்களும் காலப்போக்கில் செயல்திறனை இழக்கின்றன. அதனால் சரியான நேரத்தில் ரவுட்டரை மாற்றுவது உங்களது இன்டர்நெட் ஸ்பீட் மற்றும் கவரேஜ் ஆகியவற்றை மேம்படுத்த உதவும். இந்த கட்டுரையில் இண்டர்நெட் வேகம் குறைவதற்கான காரணங்கள் இந்த பிரச்னையை சரி செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பார்க்கலாம்.
வைஃபை ரவுட்டர் வேகம் குறைவதற்கான காரணம் என்ன?
பலர் இண்டர்நெட் வேகம் குறையும்போதோ அல்லது அடிக்கடி தடங்கல்கள் ஏற்படும்போதோ வேறு பிளானுக்கு மாறுவார்கள். ஒரு சிலர் நெட்வொர்க்கை மாற்றுவார்கள். இதனால் அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால் உண்மையான பிரச்னை நமது வைஃபை ரவுட்டரில் இருக்கலாம். நம் வைஃபை ரவுட்டர்கள் பழைதாக இருந்தால் கீழ்காணும் பிரச்னைகள் ஏற்படலாம்.
- இணைய வேகம் குறையும்.
- அடிக்கடி டிஸ்கனெக்ட் ஆகும்.
- வீட்டில் சில இடங்களில் சிக்னல் கிடைக்காது.
- ஒரு நேரத்தில் பல டிவைஸ்களை கனெக்ட் செய்ய முடியாது.
இதையும் படிக்க : புது ஸ்மார்ட்போன் வாங்கியிருக்கிறீர்களா… முதலில் இந்த பாதுகாப்பு அம்சங்களை ஆன் செய்யுங்கள்
உங்கள் வீட்டில் இந்த பிரச்னைகளை அடிக்கடி எதிர்கொண்டால் உங்கள் வைஃபை ரவுட்டரை மாற்ற நேரம் வந்துவிட்டதாக அர்த்தம். குறிப்பாக நிபணர்கள் 3 முதல் 5 ஆண்டுகளானால் வைஃபை மாற்றுவது நல்லது என அறிவுறுத்துகின்றனர். பழைய வைஃபை ரவுட்டர்களால் நமக்கு ஆபத்துகளும் ஏற்படும். குறிப்பாக டேட்டா திருட்டு, ஹேக்கிங் முயற்சிகள், மால்வேர் தாக்குதல்கள் போன்றவை ஏற்படலாம். பழைய வைஃபை ரவுட்டர் வேகத்தை குறைக்கும்.
குறிப்பாக வைஃபை 4 அல்லது 5 பயன்படுத்துபவர்கள் இந்த பிரச்னை எதிர்கொள்கிறார்கள். தற்போது புதிய வைஃபை 6 பயன்படுத்தும் போது வேகம் அதிகரிக்கும், பல டிவைஸ்களை இணைந்தாலும் ஸ்பீட் குறையாது. கேம் விளையாடும்போதோ, அல்லது வீடியோ கால்கள் பேசும்போதோ தடங்கல்கள் ஏற்படாது.
இதையும் படிக்க : சமூக ஊடகங்களில் இனி ஃபேக் ஐடிகளுக்கு No.. அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்ய ஆலோசனை மேற்கொள்ளும் அரசு!
பழைய ரவுட்டர்களில் சிக்னல் ரேஞ்ச் குறைவாக இருக்கும். குறிப்பாக பீக் நேரங்களில் வேகம் குறையும். தூரமான அறைகளில் சிக்னல் கிடைக்காது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இந்த பிரச்னைகளை எதிர்கொண்டீர்கள் என்றால் நம் இணைப்பு வழங்கியவர்களை தொடர்பு கொண்டு, புதிய தொழில்நுட்ப அப்டேட்டுடன் கூடிய வைஃபை ரவுட்டரை கேளுங்கள். மேலும் அதில் ஃபைபர் பிராட்பேண்ட வசதி இருக்கிறதா என உறுதி செய்துகொள்ளுங்கள். மேலும் வைஃபை ரவுட்டரை வீட்டின் மையப் பகுதியை மாற்றலாம்.



