AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பொன்ராஜ் மீது விஜய் நேரில் புகார் – மனுவில் குறிப்பிட்டிருப்பது என்ன?

TVK VIjay : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் வந்து  பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். அவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

பொன்ராஜ் மீது விஜய் நேரில் புகார் – மனுவில் குறிப்பிட்டிருப்பது என்ன?
விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 26 Mar 2026 21:12 PM IST

சென்னை, மார்ச் 26 : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மார்ச் 26, 2026 அன்று  டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் வந்து  பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். பிரபல அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தவெகவை விமர்சித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் பெண்கள் குறித்து அவதூராகவும், தரக்குறைவாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு ஆதவ் அர்ஜுனா மற்றும் அருண்ராஜ் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்தனர்.

பொன்ராஜ் மீது விஜய் நேரில் புகார்

இந்த நிலையில் இது தொடர்பாக விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், திமுக தலைமையின் அரவணைப்பில் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாக கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : தவெக தலைவர் விஜயின் அடுத்தக்கட்ட பாய்ச்சல்… ஒரே நாளில் 5 தொகுதிகளில் பிரசாரம்.. அனுமதி கோரி மனு!

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் நேரடியாக மார்ச் 26, 2026 அன்று சென்னை டிஜிபி அலுவலகம் வந்து பொன்ராஜ் குறித்து புகார் தெரிவித்துள்ளார். அவரது புகாரில், திமுகவின் அதீத ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் பொன்ராஜ் என்கிற நபர் தமிழகம் முழுவதும் இருக்கும் என் அம்மா, அக்கா, தங்கைகளான ஒட்டுமொத்த தமிழ்நாட்டுப் பெண்கள் இனத்தையே விலைமாதர் என்று அர்த்தம் தொனிக்கும் சொல்லை நேரடியாகவேப் பயன்படுத்தி மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார்.

விஜய் வெளியிட்ட அறிக்கை

 

இதையும் படிக்க : “கணினி மயமான உலகிலும் பழைமை மாறவில்லை”.. கட்சி கொடிகள் – சின்னங்கள் பொறித்த பொருள்களுக்கு அதிகரிக்கும் மவுசு!

தமிழ்ப் பண்பாட்டில் பெரும் போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரிய தாய்க்குலத் தங்கங்களைத் தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் பொன்ராஜ் என்கிற இந்த நபர் ஆளும் கட்சியான திமுக தலைமையின் அரவணைப்பில் இருப்பதால் தன்னை யாராலும் கட்டுப்படுத்த இயலாது என்ற நினைப்பில் எல்லைக் கடந்து அநாகரிகமாகப் பேசி வருகிறார். இவ்வாறு நம் தமிழக மகளிரை மிக மோசமாகப் பேசி வரும் இந்த நபர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து பெண்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். தன் கட்சியினர் மீதான விமர்சித்திற்கு விஜய்யே நேரில் வந்து புகார் அளித்திருப்பது அக்கட்சியினரிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

Follow Us