AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“கணினி மயமான உலகிலும் பழைமை மாறவில்லை”.. கட்சி கொடிகள் – சின்னங்கள் பொறித்த பொருள்களுக்கு அதிகரிக்கும் மவுசு!

Tamilnadu Assemply Election: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் பிரசாரத்தின் போது, பயன்படுத்தப்படும் கட்சி சின்னங்கள் மற்றும் கட்சி கொடிகள் பொறித்த தொப்பி, டி-சர்ட்டுகள், கொடைகள் உள்ளிட்ட பொருள்கள் தயார் செய்து விற்பனை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

“கணினி மயமான உலகிலும் பழைமை மாறவில்லை”.. கட்சி கொடிகள் – சின்னங்கள் பொறித்த பொருள்களுக்கு அதிகரிக்கும் மவுசு!
கோவையில் கட்சி சின்னங்கள்-கொடிகள் பொறித்த பொருள்கள் விற்பனை
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 26 Mar 2026 08:56 AM IST

தமிழகத்தில் ஏப்ரல் 23- ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. அதன்படி, தமிழகத்தில் உள்ள கட்சிகளில் கூட்டணி பேச்சு வார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு ஆகியவை முடிவடைந்துள்ளன. தற்போது, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும வேட்பாளர்கள் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொள்வதுடன், தங்கள் கட்சிக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடுவார்கள். இதன் பின்னர், பிரச்சாரம் முடிவடைந்து தேர்தல் நடைபெறும். அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது, கட்சிகளின் சின்னங்கள் மற்றும் கட்சி வர்ணம் பொறித்த பொருட்கள், கட்சி கொடிகள் ஆகியவற்றை பயன்படுத்துவது வழக்கமாகும். தற்போது, இது போன்ற பொருட்கள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கட்சி கொடி பொறித்த குடைகள்- டி சர்ட்டுகள் தயார் செய்யும் பணி

அதன்படி, கோவை மாவட்டம், டவுன்ஹாலில் உள்ள கடைகளில் கட்சி வர்ணம் குறித்த கொடிகள், குடைகள், டி- சர்ட்டுகள், பேட்ஜ்கள், துண்டுகள், இரவில் பிரச்சாரம் செய்யும் வகையில் கட்சி சின்னங்கள் அடங்கிய ஒளிரும் விளக்குகள், விசிறிகள் ஆகியவை தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவ்வாறு தயார் செய்யப்படும் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதனை பிரச்சாரம் மேற்கொள்ளும் அரசியல் கட்சியினர் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

மேலும் படிக்க: ஒரே வாரத்தில் 4 நாட்கள் விடுமுறை.. வேட்புமனு தாக்கல் செய்வதில் சிக்கல்.. திகைக்கும் வேட்பாளர்கள்..

தொப்பி, சட்டைகள், சேலைகள் உள்ளிட்ட பொருள்கள்

தற்போது, தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடங்கி உள்ளது. இதனால், வெயிலில் பிரச்சாரம் செய்யும் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் தங்களின் சின்னம் மற்றும் கட்சியின் வர்ணம் பொரித்த குடைகளை பயன்படுத்துவது வழக்கம். இதற்காக, பல்வேறு கட்சி சின்னம் மற்றும் வர்ணங்கள் அடங்கிய குடைகள் அதிகளவு தயார் செய்யப்படுகின்றன. இதே போல, கட்சியின் சின்னங்கள் மற்றும் வண்ணங்கள் அடங்கிய தொப்பி, சட்டைகள், பெண்களுக்கான சேலைகள், டி சர்ட்டுகள், கிரீடம் ஆகியவை தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கணினி மயமான உலகில் பழைய பொருள்களுக்கு மவுசு

இந்த பொருள்களுக்கு, அரசியல் கட்சியினர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. ஆண்டாண்டு காலமாக இது போன்ற பொருட்களை பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சியினர் பயன்படுத்தி வருவது காலத்தால் அழிக்க முடியாத வழக்கமாக மாறிப்போனது. இதனிடையே, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிரசாரத்துக்காக பயன்படுத்தும் வாகனங்கள் ஆகியவை பல்வேறு வசதிகளுடன் கட்டமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போதைய, கணினி மயமான உலகில் பழைமை மாறாமல் பிரச்சாரத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு மவுசு இருப்பது சற்று புருவத்தை உயர செய்கிறது.

மேலும் படிக்க: 175 இடங்களில் களம் காணும் உதயசூரியன்.. 234 தொகுதிகளிலும் நம்முடைய தொகுதியாக பணியாற்றுவோம்.. முதல்வர் ஸ்டாலின்

Follow Us