பெரம்பூரில் சொந்தமாக பங்களா வாங்கிய தவெக தலைவர் விஜய்? எதற்காக தெரியுமா?
Tvk leader Vijay: சென்னை பெரம்பூர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சொந்தமாக பங்களா வாங்கி உள்ளார். அவர் அந்த பங்களாவில் தங்கி இருந்து பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பங்களா வீட்டுக்கு இன்று பூஜைகள் நடைபெறுகிறதாம்.
தமிழக அரசியல் களத்தில் புதிய வரவான தமிழக வெற்றிக் கழகம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளது. இதற்கான, தேர்தல் பணிகளில் அந்த கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில், புதுச்சேரி மாநிலத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தமிழகத்தில் 234 தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் தலைமை இன்னும் வெளியிடவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உள்ளிட்ட முதல் கட்ட தலைவர்கள் சென்னையில் உள்ள தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதில், தவெக தலைவர் விஜய் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட இருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது. இதற்காக, பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் இன்று புதன்கிழமை ( மார்ச் 25) தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.
பெரம்பூரில் சொந்தமாக பங்களா வீடு வாங்கிய விஜய்
இதற்காக, பெரம்பூர் பகுதியில் உள்ள கொடுங்கையூர் அருகே உள்ள கண்ணதாசன் நகரில் சொந்தமாக பங்களாவை விஜய் வங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பங்களாவில், விஜய் தங்கி இருந்து தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, இன்று அந்த பங்களாவில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு, தனது பிரச்சாரத்தை விஜய் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம், பாமக- அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என 5 முனை போட்டி நிலவி வருகிறது.
மேலும் படிக்க: உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட விருப்பம் இல்லை.. தேர்தலில் போட்டியில்லை.. கமல்ஹாசன் அதிரடி..




பெரம்பூரில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய்
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. இதில், தமிழக வெற்றிக் கழகத்தின் வரவால் வாக்குகள் சிதறடிக்கப்படும் எனவும், அந்த கட்சி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சி அமைக்கும் எனவும், மாபெரும் கட்சியாக உருவெடுக்கும் எனவும் பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்றன. இதே போல, திமுக எதிர்ப்பை மையமாக வைத்து அரசியல் களத்தில் இறங்கிய விஜய் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினர் மத்தியிலும் எழுந்தது.
பெரம்பூர் தொகுதியில் கடும் போட்டி நிலவ வாய்ப்பு
தற்போது, அவர் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இதனால், அவருக்கு எதிராக களம் இறக்கப்படும் எதிர்க் கட்சிகளின் வேட்பாளர்கள் பலம் வாய்ந்தவராக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால், பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் கடும் போட்டி நிலவ அதிகளவு வாய்ப்பு உள்ளது. அந்த தொகுதியில் விஜய் போட்டியிடும் நிலையில், நட்சத்திர அந்தஸ்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு!