AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

100 டிகிரி கடந்து பதிவாகும் வெயில்.. வரக்கூடிய நாட்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை..

Tamil Nadu Weather Update: இந்த நிலையில், மன்னார் வளைகுடா முதல் வடக்கு உள்கர்நாடகா வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக மார்ச் 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றும், வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 டிகிரி கடந்து பதிவாகும் வெயில்.. வரக்கூடிய நாட்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 Mar 2026 06:25 AM IST

வானிலை நிலவரம், மார்ச் 25, 2026: தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி இருக்கும் நிலையில், வெப்பநிலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதன்படி, அதிகபட்சமாக கரூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தொடர்ந்து, வேலூரில் 36.9 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 36.3 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் 35.2 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 37.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சென்னை குறித்து பார்க்கும்போது, மீனம்பாக்கத்தில் 34.3 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 32.3 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: இனி ஒரு நபர் இத்தனை பாட்டில்கள் மட்டுமே வாங்க முடியும்.. மது விற்பனையில் புதிய கட்டுப்பாடு..

எங்கெல்லாம் மழை இருக்கும்?

இந்த நிலையில், மன்னார் வளைகுடா முதல் வடக்கு உள்கர்நாடகா வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக மார்ச் 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றும், வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மயிலை கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம்… வெளியான முக்கிய அறிவிப்பு

மார்ச் 27ஆம் தேதி கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை தொடரும். இதே நிலை மார்ச் 30ஆம் தேதி வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

படிப்படியாக அதிகரிக்கும் வெப்பநிலை:

மேலும், வரும் நாட்களில் சில மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். மழைக்கான வாய்ப்பு குறைவாக இருந்து, வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us