AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி ஒரு நபர் இத்தனை பாட்டில்கள் மட்டுமே வாங்க முடியும்.. மது விற்பனையில் புதிய கட்டுப்பாடு..

TASMAC Rules: இந்த வரம்புகளை அனைவரும் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு மாவட்ட மேலாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், விற்பனை முழுவதும் கணினி மயமாக்கப்பட்ட அமைப்பின் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே ரசீதில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி விற்பனை செய்யப்பட்டால், அது கண்டறியப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இனி ஒரு நபர் இத்தனை பாட்டில்கள் மட்டுமே வாங்க முடியும்.. மது விற்பனையில் புதிய கட்டுப்பாடு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 24 Mar 2026 15:05 PM IST

சென்னை, மார்ச் 24, 2026: தமிழகத்தில் ஏப்ரல் 23  சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், டாஸ்மாக் கடைகளில் ஒரு நபருக்கு வாங்கக்கூடிய மதுபான அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு நபருக்கு அதிகபட்சமாக 4.5 லிட்டர் மதுபானமும், 7.8 லிட்டர் வரை பீரும், மொத்தமாக 9 லிட்டர் வரை மட்டுமே விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மது விற்பனையில் புதிய கட்டுப்பாடு:

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானம் அல்லது இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்களில், 750 மில்லி லிட்டர் கொண்ட 6 முழு பாட்டில்கள் அல்லது 375 மில்லி லிட்டர் கொண்ட 12 அரை பாட்டில்கள் அல்லது 180 மில்லி லிட்டர் கொண்ட 24 கால் பாட்டில்கள் வரை வாங்கலாம். அதேபோல், ஒரு நபருக்கு 650 மில்லி லிட்டர் கொண்ட 12 பீர் பாட்டில்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும்.

மேலும் படிக்க: சென்னையில் அதிர்ச்சி! 5 ஆண்டுகள் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த திமுக நிர்வாகி கைது

இந்த வரம்புகளை அனைவரும் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு மாவட்ட மேலாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், விற்பனை முழுவதும் கணினி மயமாக்கப்பட்ட அமைப்பின் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீறினால் நடவடிக்கை பாயும்:

ஒரே ரசீதில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி விற்பனை செய்யப்பட்டால், அது கண்டறியப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சென்னைவாசிகளே வந்தது குட் நியூஸ்.. 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்!

மொத்த விற்பனைக்கு தெளிவான வரையறை இல்லை என்று மேற்பார்வையாளர்கள் கூறியதைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுகளில் சில்லறை விற்பனை கடைகளில் இருப்பில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக மதுபானங்களை வைத்திருக்கக் கூடாது என்றும், தனிநபர்களுக்கு மொத்தமாக விற்பனை செய்யக் கூடாது என்றும், தடை செய்யப்பட்ட நேரத்திற்கு பிறகு மதுபானங்களை சேமித்து வைக்கவும் விற்பனை செய்யவும் கூடாது என்றும் டாஸ்மாக் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow Us