இலவச ஃபிரிட்ஜ்.. ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் – வெளியான அதிமுக தேர்தல் அறிக்கை..
ADMK Election Manifesto 2026: அந்த வகையில் அதிமுக வரக்கூடிய சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதன்படி 297 வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளது. இந்த 297 வாக்குறுதிகளையும் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை, மார்ச் 24, 2026: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சரியாக ஒரு மாத காலமே இருக்கக்கூடிய சூழலில் தேர்தல் களம் பரபரப்பாக தொடங்கி இருக்கிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முன் புறமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அதிமுக வரக்கூடிய சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதன்படி 297 வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளது. இந்த 297 வாக்குறுதிகளையும் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக தேர்தல் அறிக்கை – முக்கிய அம்சங்கள் என்ன?
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள், 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை-யினை வெளியிட்டார்கள். #எடப்பாடியார்_உறுதியளிக்கிறார் pic.twitter.com/NGefIaAbBv
— AIADMK – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) March 24, 2026