AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட விருப்பம் இல்லை.. தேர்தலில் போட்டியில்லை.. கமல்ஹாசன் அதிரடி..

இந்நிலையில், எங்களுக்கு வழங்கப்படவிருந்த தொகுதி எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும், எங்கள் கட்சியினருக்கும் எனக்கும் ஏற்றதாக இல்லை. இருப்பினும், கூட்டணியின் வெற்றியே முக்கியம் என்பதையும் புரிந்துகொள்கிறோம். “பேட்டரி டார்ச்” சின்னம் எங்களுக்கு வெறும் சின்னமல்ல; அது எங்களின் அடையாளம்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட விருப்பம் இல்லை..  தேர்தலில் போட்டியில்லை.. கமல்ஹாசன் அதிரடி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 24 Mar 2026 21:08 PM IST

சென்னை, மார்ச் 24, 2026: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், திமுக தலைமையிலான கூட்டணிக்கு நிபந்தனையின்றி ஆதரவு அளிப்பதாகவும் அறிவித்துள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “ கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேச நலனைக் கருத்தில் கொண்டு திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தோம். கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தோம். அதன் விளைவாக, மக்கள் நீதி மய்யத்தின் குரல் மாநிலங்களவையில் ஒலித்தது. அன்று முதல் இன்று வரை, நமது தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமல் கூட்டணி தர்மத்தை பேணி வருகிறோம்.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை:

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தைகளில், தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் மற்றும் திமுக பேச்சுவார்த்தைக் குழுவினர் மரியாதையுடன், நட்புணர்வுடன் நடந்துகொண்டதை பதிவு செய்கிறேன்.

இந்நிலையில், எங்களுக்கு வழங்கப்படவிருந்த தொகுதி எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும், எங்கள் கட்சியினருக்கும் எனக்கும் ஏற்றதாக இல்லை. இருப்பினும், கூட்டணியின் வெற்றியே முக்கியம் என்பதையும் புரிந்துகொள்கிறோம்.

மேலும் படிக்க: அடுத்தக்கட்ட பரப்புரை.. சென்னை, செங்கலபட்டு, காஞ்சியில் பிரச்சாரம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி.. அட்டவணை வெளியீடு..

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட விருப்பமில்லை:

“பேட்டரி டார்ச்” சின்னம் எங்களுக்கு வெறும் சின்னமல்ல; அது எங்களின் அடையாளம். கடந்த ஒன்பது ஆண்டுகளாக எந்த ஆதாயமும் இன்றி என்னோடு பயணிக்கும் தொண்டர்களின் உணர்வுகளை புறக்கணிக்க முடியாது.

இது தியாகம் அல்ல; கடமை. சுயநலம் அல்ல; பொறுமை. தமிழ்நாடு என் குடும்பம். அந்த குடும்பத்தின் நலனுக்காக நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக “திராவிட மாடல் 2.0” அரசு அமைவது அவசியம். காந்தி, பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் ஆட்சியே தேவையாக உள்ளது.

2026 தேர்தலில் போட்டியில்லை:

எனவே, 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாக போட்டியிடாது. திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களுக்கு நிபந்தனையின்றி ஆதரவு அளிக்கிறோம்.

என்னுடன் ஒன்பது ஆண்டுகளாக பயணிக்கும் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அரசியல் என்பது தேர்தலால் முடிவதல்ல; மக்களுக்கான போராட்டம் தொடர்ந்து நடைபெறும். விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அவரை வாழ்த்துவோம் என்ற நம்பிக்கை எனக்குள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

Follow Us