அடுத்தக்கட்ட பரப்புரை.. சென்னை, செங்கலபட்டு, காஞ்சியில் பிரச்சாரம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி.. அட்டவணை வெளியீடு..
அடுத்த கட்ட சுற்றுப்பயண திட்டப்படி, மார்ச் 25ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் மக்கள் சந்திப்பு நடைபெறும். மார்ச் 27ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதிகளில் கூட்டங்கள் நடைபெறும். மார்ச் 28ஆம் தேதி சென்னை ஆர்.கே.நகர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூரில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
சென்னை, மார்ச் 24, 2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மாநில அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. முக்கியமாக, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன. தேர்தல் ஆணையமும் தேவையான ஏற்பாடுகளை தொடர்ந்து செய்து வருகிறது. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அடுத்த கட்ட சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளார். வருகிற மார்ச் 25ஆம் தேதி முதல் அவர் பரப்புரையை தொடங்குகிறார். இதற்கு முன்பு பல கட்டங்களாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த அவர், தற்போது சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கவனம் செலுத்த உள்ளார். 2026 தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் அதிமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
எடப்பாடி பழனிசாமி பரப்புரை அட்டவணை:
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம். pic.twitter.com/XnrNdbF7U8
— AIADMK – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) March 24, 2026
மார்ச் 23, 2026 அன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு முடிவடைந்தது. இருப்பினும், சில கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு இன்னும் நிலுவையில் உள்ளது; அவை விரைவில் முடிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மார்ச் 24, 2026 அன்று அதிமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் குடும்பத்தலைவிகளுக்கு இலவச ஃபிரிட்ஜ், ஆண்களுக்கும் பெண்களைப் போல இலவச பேருந்து பயணம், வீடற்றவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் போன்ற பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
மேலும் படிக்க: இலவச ஃபிரிட்ஜ்.. ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் – வெளியான அதிமுக தேர்தல் அறிக்கை..
அடுத்த கட்ட சுற்றுப்பயண திட்டப்படி, மார்ச் 25ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் மக்கள் சந்திப்பு நடைபெறும். மார்ச் 27ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதிகளில் கூட்டங்கள் நடைபெறும். மார்ச் 28ஆம் தேதி சென்னை ஆர்.கே.நகர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூரில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மார்ச் 29ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் கூட்டங்கள் நடைபெறும். மார்ச் 30ஆம் தேதி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கூட்டங்கள் நடைபெறும். மார்ச் 31ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஏப்ரல் 1ஆம் தேதி சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நடைபெறும். அதிமுக தேர்தல் பணிகளை படிப்படியாக தீவிரப்படுத்தி வரும் நிலையில், விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.