காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டி. செல்வம்.. விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்…
காங்கிரஸ் கட்சியில் ஒரு தரப்பினர் ஆட்சி அதிகாரத்தில் பங்கு மற்றும் அதிக தொகுதிகள் வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் எடுக்கும் முடிவையே பின்பற்றுவோம்; தனிப்பட்ட கருத்துகளுக்கு கட்சி பொறுப்பல்ல என்று தெரிவித்தார்.
சென்னை, மார்ச் 26, 2026: காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட மாநில பொதுச் செயலாளர் டி. செல்வம் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய நான்கு முனை போட்டி நிலவுகிறது. இதில் நாம் தமிழர் கட்சியும், தமிழக வெற்றிக் கழகமும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடுகின்றன.
அதிமுக மற்றும் திமுக கூட்டணிகள் இறுதி செய்யப்பட்ட நிலையில், தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியீடு மட்டுமே மீதமுள்ளது. இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின.
மேலும் படிக்க: சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. ஏப்ரல் 2ஆம் தேதி முதல் பிரச்சார பயணத்தை தொடங்கும் முதல்வர் ஸ்டாலின்..
காங்கிரஸ் கட்சியில் இருந்த கருத்த வேறுபாடு:
காங்கிரஸ் கட்சியில் ஒரு தரப்பினர் ஆட்சி அதிகாரத்தில் பங்கு மற்றும் அதிக தொகுதிகள் வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் எடுக்கும் முடிவையே பின்பற்றுவோம்; தனிப்பட்ட கருத்துகளுக்கு கட்சி பொறுப்பல்ல என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: வரும் தேர்தலில் திமுக மண்ணை கவ்வப்போவது உறுதி – த.வெ.க தலைவர் விஜய்..
திமுக–காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்த நிலையில், இறுதியாக காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் சிலருக்கு அதில் அதிருப்தி நிலவுகிறது. குறிப்பாக, திமுகவுடன் கூட்டணி அமைப்பதில் விருப்பமில்லாத கருத்துகளும் வெளிப்பட்டன.
தவெகவில் இணைந்த டி.செல்வம்:
இந்த நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் ஆதவ்அர்ஜுனாவை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி மாநில பொதுச் செயலாளர் டி. செல்வம் அந்தப் பதவியில் இருந்து நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையை மாநில தலைவர் செல்வப் பெருந்தகை உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, இன்று இடைநீக்கம் செய்யப்பட்ட டி. செல்வம், விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இந்த சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.