சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. ஏப்ரல் 2ஆம் தேதி முதல் பிரச்சார பயணத்தை தொடங்கும் முதல்வர் ஸ்டாலின்..
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். கடந்த சில மாதங்களாகவே அவர் மாவட்டம் தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு, மக்கள் சந்திப்பு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார்.
சென்னை, மார்ச் 26, 2026: சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அனைத்து கட்சிகளும் பரபரப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில், தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.
திமுக கூட்டணி கட்சிகள் – தொகுதி பங்கீடு:
திமுகவைப் பொருத்தவரை, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பெரும்பாலும் நிறைவடைந்துள்ளது. இன்னும் சில கட்சிகளுக்கு மட்டும் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டியுள்ளது. இதுவரை:
- திமுக – 165 இடங்கள்
- காங்கிரஸ் – 28 இடங்கள்
- தேமுதிக – 10 இடங்கள்
- விடுதலை சிறுத்தைகள் கட்சி – 8 இடங்கள்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – 5 இடங்கள்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – 5 இடங்கள்
- மதிமுக – 4 இடங்கள்
- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 2 இடங்கள்
- மனிதநேய மக்கள் கட்சி – 2 இடங்கள்
- கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி – 2 இடங்கள்
- மனிதநேய ஜனநாயக கட்சி – 1 இடம்
- எஸ்.டி.பி.ஐ – 1 இடம்
- முக்குலத்தோர் புலிப்படை – 1 இடம்
என தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்.. வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி..
விரைவில் வெளியாகும் வேட்பாளர் பட்டியல்:
திமுக எந்த தொகுதிகளில் போட்டியிடும், கூட்டணி கட்சிகளுக்கு எந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதற்கான இறுதி பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, ஓரிரு நாட்களில் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். கடந்த சில மாதங்களாகவே அவர் மாவட்டம் தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு, மக்கள் சந்திப்பு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார்.
மேலும் படிக்க: கோடம்பாக்கம் ஏரியா பாட்டுக்கு டான்ஸ் – தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் – என்ன நடந்தது?
இதன்படி, ஏப்ரல் 2ஆம் தேதி திருவாரூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். அதன் பின்னர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஏப்ரல் 21ஆம் தேதி வரை பிரச்சாரம் நடைபெறும். இறுதியாக, ஏப்ரல் 21ஆம் தேதி கொளத்தூர் தொகுதியில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.
பிரச்சார அட்டவணை:
- ஏப்ரல் 2 – திருவாரூர்
- ஏப்ரல் 3 – ஜெயங்கொண்டம், திருவரும்பூர்
- ஏப்ரல் 4 – கரூர், திருப்பூர்
- ஏப்ரல் 5 – நாகர்கோவில், திருநெல்வேலி
- ஏப்ரல் 6 – திருவள்ளூர்
- ஏப்ரல் 7 – மேட்டுப்பாளையம், சூலூர்
- ஏப்ரல் 8 – பரமத்திவேலூர், ஈரோடு
- ஏப்ரல் 9 – தர்மபுரி, கிருஷ்ணகிரி
- ஏப்ரல் 10 – வேலூர், ஆரணி
- ஏப்ரல் 11 – சிவகங்கை
- ஏப்ரல் 12 – விருதுநகர், சங்கரன்கோவில்
- ஏப்ரல் 13 – தஞ்சாவூர், மயிலாடுதுறை
- ஏப்ரல் 14 – நெய்வேலி, விழுப்புரம்
- ஏப்ரல் 15 – அணைக்கட்டு, ராணிப்பேட்டை
- ஏப்ரல் 16 – கள்ளக்குறிச்சி, சேலம்
- ஏப்ரல் 17 – ஆண்டிப்பட்டி, திண்டுக்கல்
- ஏப்ரல் 18 – ராமநாதபுரம், விளாத்திகுளம்
- ஏப்ரல் 19 – செங்கல்பட்டு
- ஏப்ரல் 20 – பெரம்பலூர்
- ஏப்ரல் 21 – ஸ்ரீபெரும்புதூர், கொளத்தூர்