கோடம்பாக்கம் ஏரியா பாட்டுக்கு டான்ஸ் – தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் – என்ன நடந்தது?
Government School Headmaster Suspended: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், கோடம்பாக்கம் ஏரியா என்ற விஜய் பாடலுக்கு நடனமாடிய தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தஞ்சாவூர், மார்ச் 26 : தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் தின விழாவில் விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, பிரச்சாரம் என தீவிரமாக இயங்கி வருகின்றன. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவர் சங்கரநாதர் குடிகாடு ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தலைமையாசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ஒரத்தநாடு பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் அக்கட்சியினரின் அழைப்பின் பெயரில் கலந்துகொண்டார்.




இதையும் படிக்க : O.S. Manian Tamil Nadu Election: வேதாரண்யம் தொகுதியில் மீண்டும் கோலோச்சுவாரா ஓ.எஸ்.மணியன்!
கோடம்பாக்கம் ஏரியா பாட்டுக்கு நடனமாடிய தலைமை ஆசிரியை
A government school headmistress danced to a film song on stage at a TVK women’s wing event -video goes viral; cited as a breach of conduct, leading to her suspension by the education department.
Location: Thanjavur #TVK #TamilNadu pic.twitter.com/nake8G9lkp— Pearson abraham/பியர்சன் (@pearsonlenekar) March 26, 2026
இந்த நிலையில் சிவகாசி படத்தில் விஜய், நயன்தாரா நடனமாடிய கோடம்பாக்கம் ஏரியா என்ற பாடலுக்கு கிருஷ்ணவேணி மேடையில் நடனமாடியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இந்த வீடியோ பள்ளி கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றுள்ளது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பள்ளி கல்வித்துறையினர், கிருஷ்ணவேணியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிக்க : தவெக தலைவர் விஜயின் அடுத்தக்கட்ட பாய்ச்சல்… ஒரே நாளில் 5 தொகுதிகளில் பிரசாரம்.. அனுமதி கோரி மனு!
பொதுவாக அரசு பணியில் இருப்பவர்கள் கட்சி சார்ந்த விழாக்கள், கூட்டங்களில் பங்கேற்க கூடாது என்ற விதி இருக்கிறது. மீறி கலந்துகொண்டால் நடத்தை விதிகளின் படி குற்றமாக கருதப்படும். சம்பந்தப்பட்ட துறை அவர்கள் நடவடிக்கை எடுக்கலாம். அதிகபட்சம் பணி நீக்கம் வரை மேற்கொள்ளலாம். அந்த வகையில் தான் பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து இது அரசியல் உள்நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என தவெகவினர் கிருஷ்வேணி சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.