AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெக தலைவர் விஜயின் அடுத்தக்கட்ட பாய்ச்சல்… ஒரே நாளில் 5 தொகுதிகளில் பிரசாரம்.. அனுமதி கோரி மனு!

Tvk Leader Vijay Campaign : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சென்னையில் வரும் மார்ச் 25- ஆம் தேதி ஒரே நாளில் 5 சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்வதற்காக அனுமதி கோரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜயின் அடுத்தக்கட்ட பாய்ச்சல்… ஒரே நாளில் 5 தொகுதிகளில் பிரசாரம்.. அனுமதி கோரி மனு!
சென்னையை குறி வைத்து விஜய்யின் முக்கிய திட்டம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 26 Mar 2026 10:33 AM IST

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அடுத்த மாதம் ஏப்ரல் 23- ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளனர். அதன்படி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிலையில், பிரச்சாரம் மேற்கொள்வதற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் கே. ஏ. செங்கோட்டையன் ஆகியோர் நட்சத்திர பேச்சாளர்களாக அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், அதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, வருகிற மார்ச் 28-ஆம் ஆம் தேதி ( சனிக்கிழமை) தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிட இருப்பதாக கூறப்படும் சென்னை மாவட்டம், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.

ஒரே நாளில் 5 சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரம்

இந்த பிரச்சாரத்துக்காக, பெரம்பூரில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே, ஒரே நாளில் 5 சட்டமன்ற தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க கோரி அந்த கட்சியினர் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வழங்கப்பட்டுள்ள மனுவில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பெரம்பூர், வில்லிவாக்கம், கொளத்தூர், விருகம்பாக்கம், அண்ணா நகர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

மேலும் படிக்க: ஒரே வாரத்தில் 4 நாட்கள் விடுமுறை.. வேட்புமனு தாக்கல் செய்வதில் சிக்கல்.. திகைக்கும் வேட்பாளர்கள்..

ஒவ்வொரு தொகுதியிலும் 3 ஆயிரம் பேர் பங்கேற்பு

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீது தேர்தல் நடத்தும் அதிகாரி விரிவான விசாரணை மேற்கொண்டு அதற்கான அனுமதியை வழங்குவார் என்று தெரிகிறது. அவர் அனுமதி வழங்கும் பட்சத்தில், விஜயின் பிரச்சாரம் தொடங்கி நடைபெற உள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.

தேர்தல் பணிகளில் தவெகவினர் தீவிரம்

இதில், தமிழக வெற்றி கழகம் வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணி மற்றும் தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளன. அந்த வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் வகையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தனது பிரச்சார பயணத்தை தொடங்க உள்ளார். அதற்கான முன் அனுமதி கோரி கட்சியினர் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: 175 இடங்களில் களம் காணும் உதயசூரியன்.. 234 தொகுதிகளிலும் நம்முடைய தொகுதியாக பணியாற்றுவோம்.. முதல்வர் ஸ்டாலின்

Follow Us