எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்பரையில் தமிழிசை… மைலாப்பூரில் போட்டியிட திட்டமா?
Edappadi Palaniswami : சென்னை மைலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பரப்புரை மேற்கொண்டிருந்தார். அப்போது, பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான தமிழிசை செளந்தர ராஜன் அந்த பரப்புரையில் பங்கேற்றார். இதனால், அந்த தொகுதியில் தமிழிசை போட்டியிட திட்டமிட்டுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று புதன்கிழமை ( மார்ச் 25 ) மைலாப்பூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: முதல்வர் மு. க. ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி இளைஞர்கள் மற்றும் அவர்களின் வாக்குகளை பெற்று ஆட்சி அமைத்து ஆனால் நீட் தேர்வை ரத்து செய்யாமல் ஏமாற்றி உள்ளனர். ஆண்டுக்கு 5 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மக்களை வாட்டி வதைக்கும் அரசாக விடியா திமுக அரசு இருந்து கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் 5 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல, சொத்து வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் லேசாக பெய்த மழைக்கே பல்வேறு இடங்களில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியது. திமுக அரசு கொள்ளையடிக்கும் அரசாக உள்ளது. திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியில் கலெக்சன், கமிஷன், கரப்ஷன் ஆகியவை மட்டுமே செய்துள்ளனர்.
மேலும் படிக்க: C. V. Ganesan Tamil Nadu Election: திட்டக்குடியில் இருமுறை வெற்றி பெற்ற சி.வெ.கணேசன்.. இந்த முறை வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது!
தமிழகத்தை ஆட்டி படைக்கும் 4 அதிகார மையங்கள்
அதிமுகவின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட புயலில் இருந்து மக்களை காப்பதற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. திமுகவில் முதல்வர் மு. க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், துர்க்கா ஸ்டாலின், அவர்களது மருமகன் சபரீஷ்வரன் ஆகிய நான்கு பேரின் அதிகார மையங்கள் தமிழகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த அதிகார மையங்களை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் துடைத்து எரிய வேண்டும். கொரோனா காலக் கட்டத்தில் மக்களின் உயிரை காப்பதில் முதல் மாநிலமாக தமிழகம் விழங்கியது. இதனை, அனைத்து மாநில முதல்வர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.




திமுக வாக்குறுதிகளில் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை
இதனை, மற்ற மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன என்றும் குறிப்பிட்டிருந்தார். அதே வேளையில், தமிழகத்தில் உணவு இன்றி மக்கள் துன்பப்படக்கூடாது என்பதற்காக அனைத்து அம்மா உணவகங்களிலும் சுட சுட உணவு தயார் செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது 525 அறிவிப்புகளை திராவிட முன்னேற்ற கழகம் அறிவித்திருந்தது. ஆனால், அதில் ஒரு பங்கு அறிவிப்பை கூட அந்த கட்சியை நிறைவேற்றவில்லை. ஆனால், 98 சதவீத அறிவிப்புகளை நிறைவேற்றி உள்ளதாக முதல்வர் மு. க. ஸ்டாலின் மற்றும் அவர்களது அமைச்சர்கள் பச்சை பொய்யை தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பரப்பரையில் தமிழிசை பங்கேற்பு
இந்த பரப்புரையில் பாஜகவின் மூத்த தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜன் பங்கேற்றுள்ளார். இந்த தொகுதியானது பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்து அமோகமாக வெற்றி பெற வைக்க வேண்டும். சென்னை மாநகரத்தில் அதிமுக வேட்பாளர் போட்டியிட்டால் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
மேலும் படிக்க: விஜய் பிரச்சாரம் செய்யலாம் – தேர்தல் ஆணையம் அனுமதி