AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிமுக 169 தொகுதிகளில் நேரடியாக போட்டி… எந்தெந்த இடங்கள் தெரியுமா.. லிஸ்ட் இதோ!

AIADMK Contest 169 Constituencies: தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்த தொகுதிகளை தவிர எஞ்சி உள்ள 169 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக நேரடியாக போட்டியிட உள்ளது. அவை எந்த தொகுதிகள் என்பது குறித்த விவரம்.

அதிமுக 169 தொகுதிகளில் நேரடியாக போட்டி… எந்தெந்த இடங்கள் தெரியுமா.. லிஸ்ட் இதோ!
அதிமுக போட்டியிடும் 169 தொகுதிகள்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 25 Mar 2026 16:12 PM IST

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் படுவேகமாக சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என வேகமாக சென்ற திமுகவை, மெதுவாக சென்ற அதிமுக முந்த தொடங்கியுள்ளது. அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் பங்கீடு செய்வதில் நீண்ட நாட்களாக இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் பாரதிய ஜனதா கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகள், பாட்டாளி மக்கள் கட்சிக்கு ( அன்புமணி தரப்பு) 18 சட்டமன்ற தொகுதிகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 11 சட்டமன்ற தொகுதிகள். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 சட்டமன்ற தொகுதிகள், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 1 சட்டமன்ற தொகுதி, இந்திய ஜனநாயக கட்சிக்கு 2 சட்டமன்ற தொகுதிகள், புரட்சி பாரதம் கட்சிக்கு 1 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்

இதற்கான, தொகுதி பங்கீடு ஒப்பந்தங்களில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்து இட்டனர். இதைத்தொடர்ந்து, பாஜக, பாமக ஆகிய கட்சிகளின் உத்தேச தொகுதி பட்டியல் வெளியானது. தொடர்ந்து, இன்று புதன்கிழமை காலை அதிமுக சார்பில் 23 பேர் அடங்கிய முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டார். இதில், பாஜக, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுக்கு 65 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த தொகுதிகளில் போட்டியிட உள்ளன.

மேலும் படிக்க: சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

169 தொகுதிகளில் அதிமுக நேரடியாக போட்டி

இதை தவிர்த்து எஞ்சியுள்ள 169 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக நேரடியாக களம் காண உள்ளது. தற்போது, அதிமுக போட்டியிட உள்ள தொகுதிகள் குறித்த விவரம் பின்வருமாறு: கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், மதுரவாயல், திரு. வி. க. நகர், துறைமுகம், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, ஓசூர், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், செங்கம், மயிலம், திண்டிவனம், வானூர், திருக்கோவிலூர், கெங்கவல்லி, எடப்பாடி, சங்ககிரி, சேலம், தெற்கு வீரபாண்டி, சேந்தமங்கலம், பவானி, அந்தியூர்கோபிசெட்டிபாளையம், பவானிசாகர், கூடலூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, பழனி, ஆத்தூர், கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, மணப்பாறை, ஸ்ரீரங்கம், துறையூர், பெரம்பலூர், திட்டக்குடிஆகிய தொகுதிகள்.

கடலூர், நாகை மாவட்டத்தில்…

இதே போல, நெய்வேலி, பண்ருட்டி, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், திருவிடைமருதூர், பாபநாசம், ஆலங்குடி, சிவகங்கை, மேலூர், சோழவந்தான், மதுரை கிழக்கு, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, போடிநாயக்கனூர், கம்பம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருவாடானை, முதுகுளத்தூர், விளாத்திகுளம், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், அரியலூர், தாராபுரம், காங்கேயம், திருப்பூர் வடக்கு, பல்லடம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம், சோளிங்கநல்லூர், ஆம்பூர், ஜோலார்பேட்டை, அரக்கோணம், ஆற்காடு, சீர்காழி ஆகிய 169 தொகுதிகளில் அதிமுக களம் காண உள்ளன.

மேலும் படிக்க: அய்யா பாமக என்ற புதிய கட்சியை தொடங்கும் ராமதாஸ்.. அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

Follow Us